புகார் அளித்தால் 10 நாளில் தீர்வு! பெரம்பூர் தொகுதி மக்களுக்காக விஜய் களமிறக்கும் புதிய ஆப்!

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Updated on

முதலமைச்சர் விஜய் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், புதிய பிரத்தியேக மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான முதலமைச்சர் விஜய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை எதிர்த்து போட்டியிட்டு 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரு தொகுதியை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதால், அவர் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும்(MLA), தமிழகத்தின் முதலமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

மேலும் ஆட்சியின் முதல் வாரத்திலேயே கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கடைகள் அடையாளம் காணப்பட்டு, முதற்கட்டமாக பல கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை மற்றும் அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்திய முதலமைச்சர், பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டார்.

முதலமைச்சர் விஜய் பதவியேற்று 50 நாட்களைக் கடந்தும், இதுவரை தனது சொந்த தொகுதியான பெரம்பூர் பக்கமே வரவில்லை என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. எனினும், முதலமைச்சரின் கடுமையான நிர்வாகப் பணிகள் மற்றும் நேரமின்மை காரணமாகவே தொகுதிப் பயணங்களில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ளஎனவே, தனது சொந்த தொகுதி மக்கள் தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளார்.

இந்தச் செயலியின் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாலை, மின்சாரம் மற்றும் துப்புரவு போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த புகார்களை நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

mobile complaint
mobile complaint

இந்த டிஜிட்டல் முயற்சி தொகுதி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் செயலியின் சிறப்பம்சங்கள்:

* முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்செயலியின் வாயிலாகப் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் அனைத்தும், நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும்.

* இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது, குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் துப்புரவு போன்ற பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு, அவற்றின் தற்போதைய நிலை குறித்து மக்களுக்கு விரிவான பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தவெக-வினர் ஷாக்..! விஜய் பங்கேற்கும் பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..!
முதலமைச்சர் விஜய்

* பெரம்பூர் தொகுதியில் புதிதாக திறக்கப்படவுள்ள நவீன சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இந்த செயலிக்கான பிரத்யேக கண்காணிப்பு (Dash-board) அமைப்பு செயல்படும்.

* தினமும் எத்தனை புகார்கள் வருகின்றன, அவை எந்தெந்த துறைகள் சார்ந்தவை என்பதைத் துல்லியமாகத் தனித்தனியாகப் பிரித்து கண்காணிக்கும் வகையில் ஒரு நவீன 'டேஷ்போர்ட்' அமைப்பும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் மட்டுமே முதலமைச்சர் அலுவலகம் இயங்கி வந்தாலும், பெரம்பூர் தொகுதி மக்களுக்காக ஒரு பிரம்மாண்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் (MLA Office) தயார் செய்யப்பட்டுள்ளது. இது முதலமைச்சரின் சொந்த தொகுதி என்பதால், பொதுமக்கள் வசதியாகவும், நேரடியாகப் புகார்களை மனுக்களாக அளிப்பதற்கும் ஏதுவாகப் பல நவீன மாற்றங்களுடன் இந்த அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் செய்த அதிரடி மாற்றம்!
முதலமைச்சர் விஜய்

இந்த நவீன செயலி மற்றும் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகிய இரண்டையும் அடுத்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் முறைப்படி திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சர் அறிமுகப்படுத்த உள்ள இந்த நவீன செயலி, பெரம்பூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com