முதல்வர் விஜய்க்கு பேருந்தில் திருஷ்டி சுற்றிய பெண்: அடுத்து முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்.!

அரசு நிர்வாகிகளுக்கும் டிக்கெட் எடுத்து பயணித்த முதலமைச்சர்; கோயம்பேட்டில் நடந்த உணர்ச்சிகரத் தருணங்கள்.
வெற்றி பயணத் திட்டம்
CM vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகையான அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க இன்று (அக்டோபர் 2) ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ முதல்வர் விஜய் சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்.

கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இத்திட்டத்தின் படி சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி, டீலக்ஸ் எல்எஸ்எஸ் மற்றும் மாநகரங்களில் இயக்கப்படும் அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க வெற்றி பயணத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடக்கி முதல்வர் விஜய்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவுக்கு 11வது தங்கம்.! வில்வித்தையில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!
வெற்றி பயணத் திட்டம்

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் வெற்றி பயணத் திட்டத்தை தொடக்கி வைப்போம் என தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். இதன்படி இன்று இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடக்கி வைத்து, மகளிருக்கு தன் கையால் இலவச டிக்கெட்டை வழங்கினார் முதலமைச்சர்.

அப்போது இலவச டிக்கெட்டில் தமிழகப் பெண்கள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப டிக்கெட்டின் பின்புறம் ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார் முதல்வர் விஜய்.

பேருந்தில் பயணித்த ஒரு பெண், முதல்வர் விஜய்யை நேரில் கண்டதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அப்போது முதல்வர் விஜய்க்கு திருஷ்டி சுற்றி போட்டுள்ளார். இதனை அன்போடு ஏற்றுக் கொண்ட முதல்வர், பதிலுக்கு அப்பெண்ணுக்கு திருஷ்டி சுற்றிப் போட்ட காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு பெண் திடீரென முதல்வர் விஜய் காலில் விழுந்தார். உடனே என்னம்மா இது என்பது போல் சைகை செய்தார் முதல்வர்.

தமிழ்நாட்டின் முதல்வர் மக்களில் ஒருவராக நெருங்கிப் பழகுவதும், சாதாரண மனிதராக இருப்பதும் பொதுமக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, தன்னுடன் பயணித்த அரசு நிர்வாகிகளுக்கும் சேர்த்து சேர்த்து பேருந்தில் நடத்துநரிடம் டிக்கெட் எடுத்தார் முதல்வர் விஜய்

இதையும் படியுங்கள்:
இது என்ன புது ட்விஸ்ட்? தங்கம் சவரனுக்கு ₹760... வெள்ளி ₹5,000 உயர்வு.!
வெற்றி பயணத் திட்டம்

வெற்றிப் பயணத் திட்டத்தின் மூலம் 12,692 பேருந்துளில் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.

வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பொதுமக்களை சந்தித்த முதல்வர் விஜய், கையசைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது ஒரு தொண்டர் தவெக கட்சி துண்டை முதல்வரிடம் தூக்கிப் போட்டார். அதனை அருமையாக கேட்ச் பிடித்து வைத்துக் கொண்டார் முதல்வர் விஜய்.

logo
Kalki Online
kalkionline.com