திடீர் திருப்பம்! விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்!

சுமுகமாக முடிந்த விவாகரத்து வழக்கு!: முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து வாழ சங்கீதா முடிவு; செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு!
vijay sangeetha
vijay sangeetha image source: filmibeat
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும் தனது கணவருமான விஜயிடமிருந்து விவாகரத்துக்குரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா. சங்கீதாவின் கோரிக்கை ஏற்று விவாகரத்து கூறும் வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கணவர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சங்கீதா தரப்பிடம் வக்கீல். நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐடி ஏன் குறிப்பிடவில்லை எனவும் விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்கு தான் அனுப்ப வேண்டும் என்றும் கூறி வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒற்றி வைத்தார்.

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால் இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே நேரத்தில் லண்டனில் இருக்கும் சங்கீதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இன்று பிற்பகலில் ஒத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தவெக கட்சித் தலைவரான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கு சட்டமன்ற தேர்தலின் போது தவெக தலைவர் விஜய்க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது . இந்த விவாகரத்து குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இருப்பினும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று தமிழக முதல்வராக விஜய் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பொறுபேற்று ஆட்சி அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

sangeetha, vijay
sangeetha, vijayAI Image

இந்த விவாகரத்து வழக்கு சுமூகமாக முடிய வேண்டும் என விஜய் ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் சங்கீதாவின் நலம் விரும்பிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தான் இன்று இந்த வழக்கு அதிக கவனம் பெற்றது.இந்நிலையில் விஜய் மற்றும் சங்கீதாவின் குடும்பம் மகிழும் வண்ணம் சங்கீதா தன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், ஜூன் 15ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.அன்றும் இருவரும் ஆஜராகாத நிலையில், இருவரும் பிரபலங்கள் என்பதால் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்ததால் இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் இணையதள முகவரி சமர்ப்பிக்கப்பட்டு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .

முதலமைச்சர் விஜய் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்றாலும் சிறிது நேரத்தில் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு முதலாவதாக சங்கீதாவிடம் விசாரணை நடந்தது. முதலில் சங்கீதாவிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை துவங்கியது. நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில் சங்கீதாவிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை நடந்தது.

காணொளி காட்சி மூலமாக லண்டனில் இருந்து சங்கீதா ஆஜரான நிலையில் சுமார் 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன்வைத்துள்ளார்.அடுத்த விசாரணைக்கான தேதி இன்று மாலை தெரிவிக்கப்படும் என நீதிபதி கூறியதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்த நிலையில் சங்கீதாவின் முடிவால் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்த விசாரணை முடிவில் விவாகரத்து வழக்கை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். லண்டனிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக சங்கீதாவிடம் சுமார் 15 நிமிடங்கள் நீதிபதி சுஜாதா விசாரணை நடத்தினார் .விசாரணை முடிவில் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதாவின். சங்கீதாவின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து கோரும் வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவித்து விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம் .

இந்த விவாகரத்து வழக்கு மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வழக்காக இருந்தது. காரணம் சங்கீதா விஜயின் 20 வருடங்களுக்கு மேலான திருமண வாழ்க்கை மற்றும் அவர்களது மகன் மற்றும் மகளின் எதிர்காலம். இப்போது இந்த வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி விஜய் சங்கீதா இணைந்து வாழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விஜய் ஆட்சியில் முற்றிலும் மாறிய 'அம்மா உணவகம்': தினசரி வருகை 1 லட்சத்தை தாண்டியது..!
vijay sangeetha
logo
Kalki Online
kalkionline.com