நான் ரீல் தாய் மாமன் அல்ல... ரியல் தாய் மாமன்.. கரூர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்..!

"நான் ரீல் இல்லை, ரியல் தாய்மாமன்" - அண்ணா பிறந்தநாளில் தங்க மோதிரத் திட்டம் வரும் என அதிரடி அறிவிப்பு!
VIJAY மக்கள் சந்திப்பு
VIJAY மக்கள் சந்திப்பு
Updated on

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கரூரில் உள்ள வெண்ணைய்மலையில் முதலமைச்சர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவங்கியது.

ஏராளமான தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலையை பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பரிசாக வழங்கி வரவேற்புரையை நிகழ்த்தினார் . தொடர்ந்து தவெகவின் மாவட்ட செயலாளர் மதியழகன்,கரூர் கிருஷ்ணராயபுரம் தவெக எம்எல்ஏ சத்யா,முன்னாள் அமைச்சரான தவெகவின் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு மற்றும் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுகவில் இருந்து விலகி தற்போது தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளியால் ஆன வாளை பரிசாக வழங்கினார்.

முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாளை பரிசாக வழங்கி பேசினார் தவெகவின் எம் ஆர் விஜயபாஸ்கர். "கடந்த ஆண்டு கரூருக்கு தவெக தலைவராக வந்த விஜய் தற்போது முதலமைச்சராக வருகை தந்துள்ளார்.எம்ஜிஆரின் அன்பும், ஜெயலலிதாவின் வீரமும் ஒன்று சேர சேர்ந்தவர் முதலமைச்சர் விஜய் என புகழாரம் சூடினார்..

தமிழ்நாட்டில் இனி விஜய் ஆட்சிதான் .விஜயை காண தமிழக மக்களை தவம் கிடக்கின்றனர் . திரையுலகில் இருந்து வந்தவருக்கு ஆட்சி நடத்த தெரியுமா என கேட்டார்கள்..மூன்று வயது குழந்தைகள் கூட தவெக கட்சியை தனது கட்சி என்கின்றனர். முதலமைச்சர் விஜய் முன் பல சவால்கள் உள்ளன. சவால்களை தூள் தூளாக்கி நல்லாட்சி தருவார் விஜய். தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான்" எனப் பாராட்டினார்.

அடுத்து" என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்களே" என மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரை..

உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.

ஒரு மனுஷன் லைஃப்ல எவ்வளவு பெரிய ஒரு உயரத்துக்கு போனாலும் மனசுல உள்ள சில வலிகள் காயங்கள். அது மறக்க முடியாது இல்லையா ? அப்படித்தான் எனக்கும் அதிக வலி தந்த இந்த கரூர் சம்பவம்.பரப்புரைக்காக திருச்சி அரியலூர் நாகப்பட்டினம் திருவாரூர் நாமக்கல் கரூர் அப்படின்னு போயிட்டு இருந்தோம் ..அரியலூர் போறதுக்கு முன்னாடி அந்த பெரம்பலூர் போலீஸ் எங்களை அலர்ட் பண்ணாங்க .மன வலியுடன் தான் பெரம்பலூர் கூட்டத்தை ரத்து செய்தேன்.

VIJAY SPEECH IN KARUR
VIJAY SPEECH IN KARUR

இதேபோல் கரூரில் அதிக கூட்டம் இருந்ததாக போலீலார் எச்சரிக்கவில்லை. காவல்துறை நினைத்திருந்தால் நான் வருவதற்கு முன்னரே கரூர் கூட்டத்தை ரத்து செய்து இருக்கலாம் . நாமக்கல் பயணத்தை முடித்து கரூர் வந்தபோது பிரச்னை எனில் காவல்துறை Alert பண்ணியிருக்கலாமே

கரூரில் நடந்தது என்ன? நெடுஞ்சாலையில் இருந்து எங்களே போலீசாரே அழைத்து வந்து சம்பவம் நடந்த இடத்தில் விட்டனர். இதில் போலீசார் மிகப் பெரிய நாடகம் நடத்தினர் என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டினார்.

கரூர் நெரிசலின் போது போலீசாரின் நோக்கம் தெரியாமல் நம்பி விட்டேன். கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என தெரியும் காவல்துறை நினைத்திருந்தால் நான் வருவதற்கு முன்னரே கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டத்தை ரத்து செய்தும் அதிகாரம் போலீசாரக்கு உண்டு .

கடவுள் மாதிரியான பச்சை குழந்தைகளை கரூர் நெரிசலில் இழந்து உள்ளேன். அண்ணன் தம்பி தங்கையை இழந்த வேதனையில் வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்து கொண்டேன் என கூறுவதா ?

கரூரில் கூடிய கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததா ?கரூரில் பழியை போட்டுவிட்டு அரசியலில் ஆதாயம் தேடுகின்றனர். கரூர் நெரிசலின் போது போலீசாரை நோக்கம் தெரியாமல் நம்பிவிட்டேன் .

சட்டப்பேரவையில் பேசிய முக ஸ்டாலின் பழியை என் மீது திருப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார் .அண்ணன் தம்பி தங்கையை இழந்த என்னை ஏளனமாக பேசுகிறீர்கள் ..

எனக்கு எல்லாம் தந்த மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். எனக்கு பணமா ஜனமா என்று கேட்டால் ஜனம் தான் முக்கியம் என்று சொல்வேன் அன்றும் இன்றும் என்றும் காலத்திற்கும் எழ முடியாத அளவுக்கு திமுகவினருக்கு தேர்தலில் சரியான பதிலடி மக்கள் தந்தனர்.என்ன நடந்தாலும் மக்களை விட்டு ஒரு நாளும் ஓட மாட்டேன்.எனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே அரசியலுக்கு வந்தேன். பணமா ஜனமா என்றால் எப்போதும் ஜனத்துடன் தான் நிற்பேன் .

மக்கள் அமைத்துக் கொடுத்த அரசு மீது டிசைன் டிசைனாக குறை மட்டும் கூறுவார்கள். காலத்திற்கும் திமுக எழ முடியாத அளவிற்கு மக்கள் நிரந்தரமாக பதிலடி தர வேண்டும்.

சட்டப்பேரவையில் பார்ட்டிஃபண்ட் எனக் கூறியதும் . தீய சக்தியும் தீர்ந்த சக்தியும் எனக் கூறியதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம் குற்றமுள்ள நெஞ்சம் தம் குறுகுறுக்கும் .பாரட்டிஃபண்ட் என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் கொள்ளை. நான் ஆட்சிக்கு வந்த பிறகு தோண்ட தோண்ட ஊழல்கள் வந்து கொண்டே இருக்கிறது. காதிலிருந்து ரத்தம் வராத குறையாத தவெக ஆட்சியை பார்த்து கதறுகிறார்கள். தோண்ட தோண்ட எத்தனை பேர் மாட்ட போகிறார்களோ?

அதிமுக திமுக ஆட்சியில் போட முடியாத பதவி உயர்வுகளை தவெக போட்டு உள்ளது .தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை. ஊழல் இல்லை .அரசு அலுவலகங்களில் வேலை டக்கு டக்கு என்று நடக்கிறது .அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல் லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும்போது அப்படி ஒரு ஹேப்பி வருகிறது.

எல் அண்ட் டி நிறுவனத்துடன் 18,600 கோடி மதிப்பில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது .நான் ரியல் தாய் மாமன் அல்ல ரியல் தாய் மாமன் அண்ணா பிறந்தநாள் முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்குகிறது.தீய சக்தி ஆட்சி ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவது போல இருந்தது. பேசுங்க பேசுங்க என்கிறார்கள் பேசினால் எழுந்து ஓடி விடுகிறார்கள். நான் ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் கொத்து பரோட்டா ஆகிவிட்டார்கள். இனி பேசுவதற்கு முன்பாக சட்டப்பேரவை கதவுகளை மூடச் சொல்ல வேண்டும்

சென்னையில் பாலம் கட்ட வழக்கமான செலவைவிட இருமடங்கு செலவில் ஒப்பந்தம் விட்டுள்ளனர். அதையெல்லாம் தோண்டி எடுத்து ரத்து செய்தோம். இன்னும் எத்தனை வருமென்று தெரியவில்லை.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்க உள்ளது. தீயசக்திபோல் ரீல் தாய்மாமன் எல்லாம் இல்லை. நான் ரியல் தாய்மாமன்.

மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எப்போது தமிழ்நாட்டின் மனுவை தள்ளுபடி செய்தது? மேகதாது விவகாரத்தில் திமுக அரசு முறையாக வாதாடியிருந்தால் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்குமா ?

சீண்டிப் பார் தொட்டுப்பார் என பேசினால் வேலை நடக்குமா? திமுக அரசு முறையாக வாதாடியிருந்தால் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்குமா? தற்போது வெறும் சாம்பிள் தான். மெயின் பிக்சரா இனிதான் பார்க்கப் போகிறீர்கள்.

தீய சக்தி திமுக தற்போது யார் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது.அரசை சோபா மாடல் என்கிறார்கள் . வாஷிங் மெஷின் என்கிறார்கள் தேர்தலில் வென்ற நமக்கு எதற்கு பேர அரசியல் ? சட்டப்பேரவை தேர்தலில் பண பலத்தை எடுத்துக்காட்டிய வெண்டிங் மெஷினை திமுக தான்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பணபலத்தை அடித்து நொறுக்கி உள்ளோம். ஒழுங்கா படி ஒழுங்கா படி, என திமுக தலையில் சம்பட்டியால் அடித்துள்ளது உச்ச நீதிமன்றம்

அரசியல் வியாபாரத்தில் ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனி ஓனர் ஓடிவிட்டார். . இன்னொருவர் ஊரை விட்டு சிங்கப்பூருக்கு செக்கப் என்று சென்று விட்டார். தற்போது தவெக ஆட்சி நடைபெறுகிறது . முதலமைச்சரான பிறகும் இன்னும் கரூருக்கு செல்லக்கூடாது என்றால் எப்படி ?

யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது கூறுங்கள். நான் உங்களுடன் உள்ளேன்.. வரப்போகும் இடைத்தேர்தலில் திமுகவை வரவிடாமல் செய்யுங்கள்.

பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும். ‘டாக் லெஸ், ஒர்க் மோர்’ என்பதே நமது அரசியல் என்றார்.

இதையும் படியுங்கள்:
பிரித்விராஜின் 'I, Nobody': ஒரு நேர்த்தியான த்ரில்லரா அல்லது சொதப்பலான மசாலாவா?
VIJAY மக்கள் சந்திப்பு
இதையும் படியுங்கள்:
#BIG BREAKING : கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கலாம்; ஆனால் அது தற்காலிகமானது தான்-நீதிமன்றம் உத்தரவு!
VIJAY மக்கள் சந்திப்பு
logo
Kalki Online
kalkionline.com