ஆந்திராவுக்கு டஃப் கொடுக்கும் தமிழகம்: தைவான் & பிரிட்டனை குறிவைக்கும் முதல்வர் விஜய் டீம்!

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முதல்வர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம்.
பிரிட்டன் பயணம்
CM Vijay
Updated on

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டனுக்கு செல்ல இருக்கிறார். செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவு வரும் நிலையில், முதல்வரின் இந்த சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதன்முறையாக விஜய் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க செப்டம்பர் 4ஆம் தேதி தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தைவானுக்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே செப்டம்பர் 10ஆம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டனுக்கு செல்கிறார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
#BREAKING: 52 கோயில்களில் கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!
பிரிட்டன் பயணம்

பிரிட்டனில் உள்ள சர்வதேச முன்னணி தொழில்துறை நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க இருக்கிறார் தமிழக முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து, புதிய முதலீடுகளை ஈர்ப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம்.

முதல்வர் விஜய்யுடன் மாநில தொழில்துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவும் பிரிட்டனுக்கு செல்லவுள்ளனர். செயற்கை நுண்ணறிவு, உயர் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த புதிய முதலீட்டுத் திட்டங்களை ஈர்ப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.

கடந்த ஆட்சியிலும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அதேபோல் தற்போது முதல்வர் விஜய்யும் தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பிரிட்டனுக்கு செல்கிறார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக கடந்த வாரத்தில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதனால் அப்பகுதியில் மார்க்கெட் சரிந்ததோடு,, ரியல் எஸ்டேட் மற்றும் முதலீடுகளும் குறைந்தன.

இந்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் பரந்தூர் விமான நிலையம் அவசியம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், 2வது விமான நிலையம் ஓசூரில் அமைய அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

CM VIJAY
CM VIJAY
இதையும் படியுங்கள்:
முதல் நாளே ரூ.5,000 சரிந்த வெள்ளி.. எகிறிய தங்கம்: தலைகீழாக மாறிய மார்க்கெட்.!
பிரிட்டன் பயணம்

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதால் ஏற்பட்ட முதலீட்டு இழப்புகளை சரிசெய்ய பிரிட்டன் செல்ல இருக்கிறார் முதல்வர். இதன்மூலம் தமிழக்திற்கான முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தொழில்துறை அமைச்சரும் முதலீடுகளை ஈர்க்க தைவானுக்கு செல்கிறார்.

தொழில் தொடங்க விரைவான அணுகல் வழங்கப்படுவதால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சி அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, செமிகண்டக்டர் மற்றும் சிப் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு தைவானில் நடைபெற உள்ள செமிகான் மாநாட்டிலும் பங்கேற்கிறது. முதல்வர் மற்றும் அமைச்சரின் சுற்றுப் பயணங்கள், தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 52 கோயில்களில் கேமரா இல்லாத போன்களுக்கு தடையில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்.!
பிரிட்டன் பயணம்
logo
Kalki Online
kalkionline.com