முதல் நாளே ரூ.5,000 சரிந்த வெள்ளி.. எகிறிய தங்கம்: தலைகீழாக மாறிய மார்க்கெட்.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

உலகப் பொருளாதார சந்தையில் ஏற்படும் அதிரடியான மாற்றங்கள், தங்கத்தின் விலையை பெருமளவு உயர்த்தியுள்ளன. இதுதவிர அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நடவடிக்கைகளும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் மாதத் தொடக்க வாரத்தில் தங்கத்தின் விலை ஓரளவு சரிந்தது. ஆனால் 2வது, 3வது வாரத்தில் தங்கத்தின் விலை திடீர் உயர்வை சந்தித்து ரூ.10,000-க்கும் மேல் உயர்ந்தது. ஆனால் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் தங்கத்தின் விலை ஓரளவு குறைந்தது. இதனால் இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் கிடைத்தது. நேற்று மாதத்தின் கடைசி நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 குறைந்தது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (ஆகஸ்ட் 31) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1,080 குறைந்து 14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 1) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு சவரனுக்கு ரூ.15,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலாவது தங்கத்தின் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இதற்கான வாய்ப்புகள் குறைவு தான். தொடக்கத்தில் சரிந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து விடும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வந்தாச்சு தங்க ATM: தங்கத்தை பணமாக்க இனி 30 நிமிடங்கள் போதும்.!
தங்கம் விலை
தங்கம் விலை
Gold Price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.14,370 1 சவரன் ரூ.1,14,960

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.14,505 1 சவரன் ரூ.1,16,040

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.14,800 1 சவரன் ரூ.1,18,400

ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.14,725 1 சவரன் ரூ.1,17,800

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

ஆகஸ்ட் 31: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 30: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 29: 1 கிராம் - ரூ.260

ஆகஸ்ட் 28: 1 கிராம் - ரூ.265

ஆகஸ்ட் 27: 1 கிராம் - ரூ.265

ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 1-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனையானது. ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 1-ல் ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.136-க்கு விற்பனையானது.

கடந்த கால விலை நிலவரங்களை இன்றைய விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
'ஆட்டோ ஸ்வீப்' : இப்படி கூட பணத்தை முதலீடு பண்ணலாம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com