இவர்களுக்கும் அரசுப் பணி வேண்டும்.. முதல்வரிடம் அன்புமணி வைத்த முக்கிய கோரிக்கை.!

கரூர் சம்பவத்திற்குப் பின் அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய கோரிக்கை - என்ன நடக்கும்?
அரசுப் பணி
Anbumani - CM Vijay
Updated on

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 2 மாதங்களில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணியை நேற்று (ஜூலை 10) வழங்கினார் முதல்வர்.

இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இன்று முதல்வர் விஜய்யை சந்தித்த அன்புமணி, கரூர் சம்பவத்தை பின்பற்றி வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வெறும் 5 ரூபாய் தான்..! வந்துவிட்டது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!
அரசுப் பணி

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த பிறகு, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று தான் தவெக தலைவர் விஜய் கரூருக்குச் சென்றார். அதுவும் தமிழக முதல்வராக சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தகுதிக்கு ஏற்ப அரசுப் பணியும் வழங்கியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த அரசுப் பணி தற்காலிகமானது தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அன்புமணி வைத்த கோரிக்கையில், “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கியது வரவேற்கத்தக்கது. அதேபோல் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் கொல்லப்பட்ட 21 பேரின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக அவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடி வருகிறோம். முதல்வர் விஜய் பாமக-வின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள சமூக நீதிப் போராட்டங்களில் 1987-ல் நடந்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வன்னியர்களுக்கு மாநில அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடும், தேசிய அளவில் 2% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தின.

இந்தப் போராட்டத்தை அடக்க அப்போதைய மாநில அரசு நடத்திய போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் சுமார் 21 பேர் உயிர் நீத்தனர்.

வன்னியர் இட ஒதுக்கீடு
anbumani ramadosssource:the federal

இட ஒதுக்கீடு போராட்டம் தொடர்பான சமூக அழுத்தத்தின் விளைவாக பிற்படுத்தப்பட்டோர் வகையினரை இரண்டாக பிரித்தது தமிழக அரசு. இதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் வன்னியர்கள் உட்பட 108 சாதியினர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் பலமான சக்தியாக உருவெடுத்த வன்னியர் சங்கம், நாளடைவில் பாட்டாளி மக்கள் கட்சியாக அரசியலில் தடம் பதித்தது. ஆனால் உயிரிழந்த 21 பேரின் குடும்பத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக சலுகைகள் வழங்க பாமக தொடர்ந்து போராடி வருகிறது.

இருப்பினும் இந்த சலுகை இன்று வரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது முதல்வர் விஜய்யிடம், அன்புமணி கோரிக்கை வைத்திருப்பதால் பல ஆண்டுகால போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரூ.5,000 சரிவு.! இனி பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் தங்கம் வாங்கலாம்.!
அரசுப் பணி
logo
Kalki Online
kalkionline.com