#BREAKING: ஆதாரம் போதுமா.. திமுகவின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய முதல்வர் விஜய்..!

vijay assembly speech
vijay assembly speechimage credit-maalaimlar.com
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

சட்டமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். 1970-ல் வீராணம் திட்டத்திற்கு சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்டுமெனில் கமஷன் தர வேண்டும் என திமுக அரசில் கேட்கப்பட்டதாக அறிக்கையில் உள்ளது. இதனை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.

டெண்டர் வேணும்னா இரண்டரை சதவீதம் கமிஷன் வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக சர்க்காரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படியுங்கள்:
#BREAKING: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் விடுத்த முக்கிய வேண்டுகோள்.!
vijay assembly speech

சத்யாநாராயணா கம்பெனிக்கு டெண்டர் வழங்க வேண்ட அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

ஆதாரம் வேணும்னா பார்லிமெண்டுக்கு போக வேணாம். சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு செல்லுங்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்காரியா குழு எழுதிய புத்தகம் இருக்கிறது.

பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் திமுக ஊழல் செய்து வருகிறது. கட்சி நிதிக்கான ஆதாரத்தை வெளியிட்டார் முதல்வர் விஜய்.

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக குறத்து ஆவேசமாக பேசினார்.

3 கோப்புகளை வெளியிட வேண்டும் என திமுக சவால் விட்ட நிலையில், சாம்பிளுக்கே திமுக அரண்டு போனது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். திமுக எதை செய்தாலும் குடும்பத்தோடு தான் செய்வார்கள். கட்சி நிதியைக் கூட சேர்ந்து தான் வாங்கியுள்ளனர்.

கட்சி நிதி என்ற பெயரில் ரூ.10 முதல் ரூ.100 வரை வாடிக்கையாளர்களிடம் சேகரித்தது திமுக.

2 துறையை வெளியிட்டத்ற்கே இப்படி என்றால், மற்ற துறைகளை வெளியிட்டால் திபுக என்னவாகும். ஆதாரம் வேண்டும் எனக் கேட்டார்களே.. ஆதாரம் போதுமா என முதல்வர் விஜய் ஆவேசம்.

தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும் என கர்ஜித்தார் முதல்வர் விஜய்.

logo
Kalki Online
kalkionline.com