#BREAKING: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் விடுத்த முக்கிய வேண்டுகோள்.!

CM Vijay
Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழக சட்டசபை 3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. இன்று தமிழக முதல்வர் விஜய் காவல் துறை மானிய கோரிக்கை மீது பதிலுரை அளித்தார். தமிழகத்தில் குற்றம் நடந்த பிறகு தண்டனை கொடுப்பது மட்டும் அரசின் வேலை அல்ல. குற்றம் நடந்ததற்கான சூழலைக் கண்டறிந்து, அதனை முன்கூட்டியே தடுக்கவும் அரசு விழிப்புணர்வுடன் செயல்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும். காவல்துறை மரணங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதந்திரமான, நவீனமான காவல் துறையை உருவாக்குவதே அரசின் இலக்கு. உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் காவல் துறையினர் நலனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படுவது உறுதி செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பதிவாகும் ஒவ்வொரு வழக்கையும் விரைந்து விசாரிக்கப்படும். காவல் துறையின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு நிர்வாகம் ஊழலற்றதாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பூமி அழிய போகிறதா? 1.5°C வெப்ப உயர்வால் ஐ.நா விடுத்த பரபரப்பு எச்சரிக்கை!
CM Vijay

சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட வேண்டுகோளை முன்வைத்தார் முதல்வர் விஜய். தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்த்தி பேச வேண்டாம் என முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களைப் பற்றி ஆபாசமாகவோ, டபுள் மீனிங்கில் பேச வேண்டாம். நம் வீட்டில் இருக்கும் தாய், தங்கைகளும் பெண்கள் தான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல்வேறு அவமானங்களை சந்தித்துள்ளார். இனி பெண்கள் குறித்து தவறாக பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அசங்கமான அரசியல் வேண்டாம். நாகரிகமான அரசியல் செய்வோம் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com