தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா நெஞ்சு பதறுதா? – நவ.1 முதல் மத்திய அரசின் காலர் ஐடி அமல்!

நவம்பர் 1 முதல் கட்டாயம்; அழைப்பவர் பெயர் நேரடியாக திரையில் காட்சியளிக்கும்!
spam protection
spam protection
Updated on: 

இந்தியாவில் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. தொலைபேசி அழைப்புகளை செய்பவர்களின் பெயரை திரையில் காட்டும் 'CNAP' (Calling Name Presentation) என்ற அதிகாரப்பூர்வ காலர் ஐடி சேவையை 2026 நவம்பர் 1 முதல் கட்டாயமாக்க தொலைத்தொடர்பு துறை (DoT) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

CNAP எவ்வாறு செயல்படும்?

தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவுப்படி, 4G மற்றும் 5G நெட்வொர்க் பயனர்களுக்கு இந்த CNAP சேவை இயல்பாகவே (Default) செயல்படுத்தப்படும்.

நீங்கள் ஒருவரின் எண்ணைச் சேமித்து வைத்திருந்தால், முதலாவதாக அவரது எண்ணும், இரண்டாவதாக நீங்கள் சேமித்த பெயரும் திரையில் தோன்றும்.எண் சேமிக்கப்படாவிட்டால், அழைப்பு செய்பவர் தனது சிம் கார்டு வாங்கும் போது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தரவுத்தளத்தில் (Subscriber Database) பதிவு செய்துள்ள அதிகாரப்பூர்வ பெயர் திரையில் காட்சியளிக்கும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பெயருக்குப்பதிலாக “International Call” என்று மட்டுமே திரையில் தோன்றும்.

பாதுகாப்பு மற்றும் வணிக அமைப்புகள்:

ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களின் பெயர்கள் அடங்கிய தரவுத்தளத்தை பராமரிக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக, அழைப்பு முடிந்ததும் அழைத்தவரின் பெயர் சேமிக்கப்படாமல் அழிக்கப்படும் (Security-by-design). மேலும், 'Calling Line Identification Restriction' வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர்கள் திரையில் காட்டப்படாது.

வணிக நிறுவனங்கள் மற்றும் மொத்த இணைப்புகளைப் (Bulk Connections) பயன்படுத்துபவர்கள், தங்களுடைய அதிகாரப்பூர்வ வர்த்தகப் பெயரைத் (Trade Mark/GST Registered Name) திரையில் காட்ட விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆவணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிபார்த்த பின் அனுமதி வழங்கும்.கடந்த சில மாதங்களாக 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகே இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

ஸ்பேம் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி: போலிப் பெயர்களில் சிம் கார்டு வாங்கி சைபர் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேவையில்லாத ஸ்பேம் (Spam Callers) அழைப்புகளைச் செய்பவர்களை எளிதில் கண்டறிய இந்த அமைப்பு பெரிதும் உதவும்.

spam calls and unknown calls
spam calls and unknown calls

(Third-party Apps) தேவை இருக்காது: ட்ரூக்காலர் (Truecaller) போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகளைப் பயன்படுத்தும்போது பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் (Data Privacy) பகிரப்படும் அபாயம் இருந்தது; ஆனால், மத்திய அரசின் நேரடி CNAP அமைப்பினால் பயனர்களின் தரவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

சிம் வாங்கும் போது கொடுத்த ஆவணப் பெயரே தோன்றும்: பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பெயர்களை மாற்றிக்கொள்ள முடியாது; சிம் கார்டு வாங்கும் போது அரசுச் சான்றிதழ்களில் (e-KYC / Aadhaar) வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரே திரையில் காட்சியளிக்கும்.

2G மற்றும் 3G பயனர்களுக்குக் தனி திட்டம்: முதல்கட்டமாக 4G மற்றும் 5G பயனர்களுக்கு மட்டுமே இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; பழைய 2G, 3G மற்றும் லேண்ட்லைன் (PSTN) வாடிக்கையாளர்களுக்கு இச்சேவையைக் கொண்டுவருவது குறித்துத் தனியாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
'ஹாய்... இவரை தெரியுமா?' - வாட்ஸ்அப்பில் தூண்டில் போடும் சைபர் திருடர்கள்!
spam protection
logo
Kalki Online
kalkionline.com