பெண்களின் உடல் குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின் குற்றப்பிரிவிற்கு கீழ்தான் வரும் என்று கேரளா அரசு தெரிவித்திருக்கிறது.
பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுவது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் தங்களது உடல்களை குறித்து கிண்டல் செய்யும் நபர்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களின் உடல் அமைப்பை சொல்லித் திட்டுவதும், சொல்லி கிண்டல் செய்வதும், நக்கல் செய்வதும், அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவதும் பல நேரங்களில் நடக்கிறது.
இதற்கு எந்த விதமான தண்டனைகளும் இல்லை என்பதால், ஒரு கூட்டம் இதனை எந்த பயமும் இன்றி செய்கிறார்கள். இதனால் இதுபோன்ற சொற்களை எதிர்க்கொள்ளும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவதும் உண்டு.
அந்தவகையில், தற்போது கேரளா அரசு ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார். 2013 முதல் தன்னைத் தவறாகப் பேசி வருவதாகவும் 2016-17ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்திகள், குரல் பதிவுகளை அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் கூறியதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த ஊழியர் வழக்குத் தொடர்ந்தார். இதனை இன்று கேரளா அரசு தள்ளுபடி செய்திருந்தது.
இந்தநிலையில்தான் கேரளா அரசு ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது. அதாவது, “ஒரு பெண்ணின் உடலமைப்பு ‘நன்றாக இருக்கிறது’ என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். எனவே, குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே,” என்று அந்த வழக்கை ரத்து செய்திருக்கிறது.
இதனை மக்கள் வரவேற்கின்றனர். பெண்களின் உடல் அமைப்பை பற்றி பேசினால், தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருந்தால், பல குற்றங்கள் குறையும் என்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனால், பெண்களின் மனநிலை பாதிக்காமல் இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.