#BREAKING: பொதுமக்களுக்கு ஷாக்..! மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை..!

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று (நவம்பர் 1-ம்தேதி) உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை
வணிக சிலிண்டர் விலை
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நவம்பர் 1-ம்தேதி ரூ.10.50 காசுகள் உயர்ந்து ரூ.2,994.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் முதல் தேதி வணிக மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) மற்றும் விமான எரிபொருள் (ATF) விலைகளை மாற்றி அமைப்பது வழக்கம். சில மாதங்களில் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடர்வதும் உண்டு.

அந்த வகையில், நடப்பு மாதமான நவம்பரில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 காசுகள் உயர்ந்து ரூ.2,994.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த மேற்காசிய போரின் காரணமாக பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது. இதன் விளைவாக எரிபொருள் விலையும் உலகளவில் பன்மடங்கு உயர்ந்தது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஜூன் இறுதியில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எரிபொருள் விலையும் குறைந்தது.

இதையும் படியுங்கள்:
14.2 கிலோ LPG சிலிண்டர் 60 நாட்கள் வரை வரணுமா? கேஸ் மிச்சமாக்க இந்த 7 வழி போதும்!
வணிக சிலிண்டர் விலை

அதன் விளைவாக ஜூலை மாதம் ரூ.183.5 மற்றும் ஆகஸ்ட் மாதம் ரூ.192 என இரண்டு மாதங்களாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் இரு நாடுகளும் தாக்குதலை தொடங்கிய நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது.

இதனால் சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம்தேதி நிலவரப்படி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.66.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2,983க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதமும் (நவம்பர் ) வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையானது ரூ. 10.50 காசுகள் அதிகரித்திருக்கிறது.

தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் ஓட்டல், பேக்கா, டீக்கடை மற்றும் சிறிய உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம், தற்போதைய காலகட்டத்தில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் அன்றாட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை பெரிதும் பாதித்து வருகிறது. சமையலறை செலவுகளை சமாளிக்க இல்லத்தரசிகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
உங்க கேஸ் திருடப்படுகிறதா? சிலிண்டர் எடை குறைகிறதா? உடனே இத படிங்க!
வணிக சிலிண்டர் விலை

இத்தகைய சூழ்நிலையில், குடும்ப பட்ஜெட்டில் முக்கிய பங்கு வகிக்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் (LPG Cylinder) விலையை இந்த மாதம் (நவம்பர்) எண்ணெய் நிறுவனங்கள் மேலும் உயர்த்தாதது இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிம்மதியையும், ஆறுதலையும் தந்துள்ளது.