#BREAKING: ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்: வணிக சிலிண்டர் விலை ரூ.172 குறைந்தது..!!

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 காசுகள் குறைந்து ரூ.3.106-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலைAI Image
Updated on

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தங்களை செய்கின்றன. சில மாதங்களில் திருத்தம் ஏற்படாமலும் இருப்பதுண்டு. ஜூன் மாதத்தில் சமையல் கேஸ் மற்றும் வணிகரீதியான (Commercial LPG Cylinder) எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

அதன்படி, இன்று ஜூலை 1-ம்தேதி வணிகப் பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டர் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் நிலையாகத் தொடரவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையோன மோதல்களுக்கு பிறகு சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு, இந்தியாவில் சமையல் கேஸ் (LPG) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. போர் தொடங்கியது முதல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தியாவின் 70%-க்கும் அதிகமான எரிவாயு தேவைகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், வணிக ரீதியான (Commercial LPG) சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அது தொடர்பான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. சமையல் சிலிண்டர்களைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிலிண்டர் விலை முதல் முன்பதிவு மற்றும் விநியோகம் வரை பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

போர் எதிரொலியாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பிப்ரவரி மாதம் முதல் வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

வணிக சிலிண்டர்
வணிக சிலிண்டர்

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கடந்த 6 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை மொத்தம் ரூ.1546 உயர்ந்துள்ளது. அதாவது ஆறு மாதங்களில் இதன் விலை 1580 ரூபாயில் இருந்து ரூ. ரூ.3,282 ஆக உயர்ந்துள்ளது. இது உணவகம், ஓட்டல் வைத்திருப்பவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் வீட்டு உபயோக (14.2 கிலோ) எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.957.50 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டரின் விலை ரூ.3,282 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புது சிக்கல்..! ஏஜென்சி நோக்கி படையெடுக்கும் மக்கள்..!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை

தற்போது மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்து நிலைமை சீரடைந்ததை அடுத்து, வணிக மற்றும் தொழில்துறைக்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) மீதான முந்தைய கட்டுப்பாடுகளை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது. அதேபோல் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளும் இன்று (ஜூலை 1 ) முதல் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வணிக மற்றும் சமையல் உபயோக கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் வணிய பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டர் இல்லையா? கவலை வேண்டாம்! அடுப்பில்லாமல் சமைக்க இதோ 14 சூப்பர் ஐடியாக்கள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை

அதன்படி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 காசுகள் குறைந்து ரூ.3.106-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் ரூ.957.50- ஆக தொடர்கிறது.

பெரிய அளவில் விலை குறையும் என எதிர்பார்த்துக் காத்திருந்த வணிகர்களுக்கு, இந்த மாற்றம் சற்று ஆறுதலையே தந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com