ஹேப்பி நியூஸ்: Post Office-க்கு நிகராக வட்டியை உயர்த்திய ‘கூட்டுறவு வங்கி’...!!

தமிழகத்தில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி ஆண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கிAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

தமிழ்நாட்டில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணத்தை போட்டு வைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கி (Cooperative Banks In Tamil Nadu) சூப்பரான அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் தற்போது டெபாசிட் செய்யும் பணத்துக்கு ஆண்டுக்கு 8.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக வட்டி வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில், தங்க நகைக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதிலும் புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். கூட்டுறவு துறை கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன், நகைக் கடன் உட்பட, பல பிரிவுகளில் கடன் வழங்குகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகளை பொறுத்தவரை கூட்டுறவு வங்கிகளையே அதிகம் நம்பி உள்ளனர். அதிலும் ஏழை, எளிய மக்கள் தங்களின் அவசர தேவைக்காக, குறைந்த வட்டியில் தங்க நகையை அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகள் பெரியதும் உதவியாக உள்ளன.

இதற்கான நிதியை, மக்களிடம் இருந்து வைப்பு தொகையாக திரட்டுவதுடன், 'நபார்டு' எனப்படும் தேசிய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்தும் கடன் வாங்குகின்றன. அதாவது, மக்கள் தங்களிடமுள்ள பணத்தை சேமிக்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். அவ்வாறு டெபாசிட் செய்யும் பணத்திற்கு கூட்டுறவு வங்கி வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, தேவையானவர்களுக்கு பல்வேறு கடன்களாக வழங்க முடிகிறது.

இந்நிலையில், தான் சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, கூட்டுறவு வங்கி வைப்பு தொகைக்கு வழங்கப்படும் வட்டி குறித்து சூப்பரான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

gold loan |கூட்டுறவு வங்கி
gold loan |கூட்டுறவு வங்கி

அதன்படி கூட்டுறவு வங்கிகளில் வைப்பு தொகைக்கான வட்டி, ஆண்டுக்கு அதிகபட்சமாக, 8.25 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பொது குடிமக்களுக்கு இந்த வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கு அதனுடன் சேர்த்து கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், கூட்டுறவு வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழக்கமாக கிடைக்கும் வட்டி விகிதத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி நகைக்கடன் பெறுபவர்களுக்கும் ஒரு முக்கியமான விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி

இதேபோல், நகைக்கடன் பெறுபவர்களுக்கும் ஒரு முக்கியமான விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக் கடன் காப்பீடு: உங்கள் குடும்பத்தின் நிம்மதியை உறுதிசெய்யும் ரகசியம்!
கூட்டுறவு வங்கி

ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.10,000 அல்லது தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என இரண்டில் எது குறைவோ, அந்த தொகை கடனாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தங்கத்தின் எடையை மட்டும் பார்க்காமல், அதன் சந்தை மதிப்பையும் கணக்கில் கொண்டே ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் புதிய நகைக்கடன் தொகை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருபுறம் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை (Deposit) செலுத்துவோருக்கு 8.25 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.25 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் நகைக்கடன் தொகை நிர்ணயத்திற்கான புதிய வரம்பும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி நியூ இந்தியா கூட்டுறவு வங்கி செயல்படாது..?
கூட்டுறவு வங்கி

ஏராளமான மக்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று பயனடைந்து வரும் நிலையில், இந்த அதிரடியான அறிவிப்பு சமானிய மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com