

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் பாரம்பரிய கைத்தறி ஆடைகளை வாங்குவதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்ஸ் கிளைகள் உள்ளன.
தற்போது கோ-ஆப்டெக்ஸ் சார்பில் நாடு முழுவதும் மொத்தம் 145 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பான்மையாக தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள் உள்பட ஏராளமான ஜவுளி ரகங்கள் உள்ளன. அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், பருத்தி சட்டைகள், திரைச் சீலைகள், நைட்டீஸ், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள்,மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வாங்க ஒரே இடம் கோ-ஆப்டெக்ஸ் தான்.வீட்டு உபயோக துணி ரகங்கள், ஜமக்காளங்கள் திரைச்சீலைகள், தோடர் பழங்குடியின மக்களின் எம்பிராய்டரி துணி தயாரிப்புகள், சுடிதார் மெட்டீரியல்கள், ரெடிமேடு சட்டைகள் மற்றும் கைப்பைகள் என ஏராளமான ரகங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதிய இரகங்களான பிரிண்டட் சட்டைகள், பிரிண்டட் குர்த்தீஸ்கள், பாலிரயான் எம்ப்ராய்டரி குர்த்தி, ஸ்ட்ரெய்ட் பேண்ட், சக்கராபேண்ட் வித் கிராப் டாப், பலாசோபேண்ட் வித் கிராப் டாப் செட், தோத்தி பேண்ட் வித் கிராப் டாப், காட்டன் ஸ்லப் பிரிண்டட் குர்த்தீஸ், காட்டன் ஸ்லப் கலம்கரி குர்த்தீஸ் ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன.சிறுமிகளுக்கான பட்டு பாவாடை சட்டை இரகங்கள், புதிய வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட காட்டன் ஆடவர்களுக்கான லினன், ரிங்க்கிள் சேலைகள், நைட்டிகள், ஸ்லிம்ஃபிட் ரெடிமேட் சட்டைகள் ஆகியவையும் ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை 15.09.2026 முதல் 30.11.2026 வரை வழங்குகிறது. இந்த காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து விதமான நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும்.சலுகைகள் இருக்கும்வரை மட்டுமே தள்ளுபடி விலையில் கோ-ஆப்டெக்ஸ் பொருள்களை வாங்க முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
மாதாந்திர சந்தா திட்டம்
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் தற்போது மாத சந்தா திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமுள்ள 12 மாதங்களில் 12 ஆவது மாதத்துக்கான தவனை தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகமே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ. 300 முதல் ரூ. 3,000 வரை என மொத்தம் 12 மாத சந்தா திட்டங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 11 மாதம் பணம் செலுத்தி 12 ஆவது மாதத்தில் செலுத்திய மொத்த தொகைக்கான மதிப்பில் விருப்பப்பட்ட ஆடையை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.