இனி ‘சிரப்’ மருந்துகள் வாங்க டாக்டர் சீட்டு கட்டாயம்..!!

சிரப் வடிவிலான மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிரப் மருந்துகள்
சிரப் மருந்துகள்AI Image
Updated on

மத்திய சுகாதார அமைச்சகம் சிரப் வடிவிலான அனைத்து மருந்துகளுக்கும் (இருமல் மருந்துகள் உட்பட) புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனிமேல் நாடு முழுவதும் மருந்தகங்களில் விற்கப்படும் இருமல் சிரப் (Syrup)உள்ளிட்ட அனைத்து வகை சிரப் மருந்துகளையும் இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் இனி ஓவர்-தி-கவுண்டர் (OTC) முறையில் நேரடியாக வாங்க முடியாது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்தாண்டு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் , பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருமல் சிரப் மருத்து குடித்து 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதனால், இருமல் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குழந்தைகள் காய்ச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட இருமல் சிரப் மருந்தில் டை எத்திலின் கிளைக்கால் என்னும் நஞ்சுப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.

இவை குழந்தைகளில் உடல் உறுப்புகளை செயலிழக்க செய்து பின்னர் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டது. மேலும், இந்த மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் வாங்கி பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் குழந்தைகளில் உயிரிழப்பு காரணமாக இருந்த மருந்து நிறுவனத்தை மத்திய அரசு தடை செய்தது. இதற்கிடையே, நடப்பாண்டு தொடக்கத்தில், மத்திய அரசு வெளியிட்ட மருத்துவ நிபுணர்களுக்கான வழிகாட்டி கையேடு வரைவில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

2026 ஜூன் 9-ம்தேதி வெளியான கெஜட் அறிவிப்பின் மூலம் சிரப் மருந்துகளுக்கான முந்தைய விலக்கு நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்திய மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ், இதுவரை மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இன்றி விற்க அனுமதிக்கப்பட்டிருந்த 'சிரப்ஸ்' மருந்துகள் அந்த விலக்கு பட்டியலில் (Schedule K) இருந்து இருமல் மருந்து உட்பட அனைத்து வகையான சிரப்புகளையும் நீக்கம் செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் சிரப் வகை மருந்துகள் அனைத்தும் மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே வழங்கப்படும் மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை பல சிரப் மருந்துகள் "ஓவர் தி கவுண்டர்" (OTC) மருந்துகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதாவது மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே பொதுமக்கள் மருந்தகங்களில் சிரப் மருந்துகளை வாங்க முடிந்தது. ஆனால் புதிய விதி அமலுக்கு வந்துள்ளதால், இனி அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு இருமல் மருந்து: எப்போது ஆபத்தாகிறது?
சிரப் மருந்துகள்

இந்த நடவடிக்கைக்கு பின்னணியாக, சமீப காலங்களில் சில மாநிலங்களில் தரமற்ற இருமல் சிரப் மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமின்றி இருமல் சிரப் உள்ளிட்ட சிரப் மருந்துகளில் தவறான பயன்பாடு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வந்தனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக சிரப் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கவலைகள் எழுந்து வந்தன. அதனை தொடர்ந்து மருந்துகளின் தரத்தை கண்காணிப்பது, உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிரப் மருந்துகள்
சிரப் மருந்துகள்AI Image

அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சுய மருத்துவம் மற்றும் மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்படும் சிரப் மருந்துகளின் அட்டைகளில் அவற்றின் பயன்பாடு, பக்கவிளைவுகள் மற்றும் எச்சரிக்கைகள் ஆகியவை மிகவும் தெளிவாக அச்சிடப்பட வேண்டும். நோயாளி பாதுகாப்பு மற்றும் மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மத்திய அரசு செக்..! இனி சாதாரண மருந்து கடைகளில் இருமல் மருந்துகள் விற்பனைக்கு கிடைக்காது..!
சிரப் மருந்துகள்

புதிய விதியின் மூலம், சிரப் மருந்துகளின் தவறான பயன்பாடு குறையும் என்றும், நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மருந்துகளை பயன்படுத்துவதால் உடல்நல பாதுகாப்பு மேம்படும் என்றும் சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், இனி இருமல் சிரப் உள்ளிட்ட எந்த சிரப் மருந்தையும் வாங்கச் செல்லும் முன் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com