

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் Common Services Centre (CSC) இணைந்து, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆதார் Supervisor (Supervisor) மற்றும் Operator (Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 432 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், UIDAI அங்கீகரித்த Aadhaar Operator / Supervisor Certificate பெற்றிருப்பது கட்டாய தகுதியாகும்.
இந்த பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆகஸ்ட்டு 31-ம்தேதி வரை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆதார் வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் :
மொத்த காலியிடங்கள் : 432
அமைப்பின் பெயர் : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) & CSC
வேலை வகை : மத்திய அரசு வேலை
பணியின் பெயர் : Aadhaar Supervisor / Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)
கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI அல்லது பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் : ரூ.25,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பம் தொடங்கும் தேதி : 30.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2026
விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை என்பதால் தகுதியானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியிடம் : இந்தியா முழுவதும் (தமிழ்நாடு உட்பட)
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://cscspv.in
கல்வித் தகுதி :
ஆதார் சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.
* 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(அல்லது)
* 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பாலிடெக்னிக் டிப்ளமோ (Diploma) முடித்திருக்க வேண்டும்.(அல்லது)
* 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ITI முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வித் தகுதியுடன், விண்ணப்பதாரர்கள் UIDAI அங்கீகரித்த Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting)
நேர்காணல் (Interview)
ஆவண சரிபார்ப்பு (Document Verification)
தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், CSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://csc.gov.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதில் உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து, அதற்கான “Apply Now” பட்டனை கிளிக் செய்து, தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, கல்வித் தகுதி, சான்றிதழ்கள் மற்றும் பிற தகுதி நிபந்தனைகளை சரிபார்த்து, காலக்கெடுவிற்கு முன்பாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.