சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்! வந்தாச்சு 'டிசைனர் அரிசி'... சாப்பிட்டா சுகர் ஏறாது.. 3 மடங்கு புரோட்டீன் வேற..!

Rice
Rice
Published on

பசிக்கு உணவாகும் ருசியான அரிசி ரகங்கள் மீதான புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அரிசி என்பது இந்தியர்களின் முக்கிய உணவு. பச்சரிசி(Raw Rice) ,புழுங்கல் அரிசி (Parboiled Rice) என இரண்டே ரகங்கள் இருந்த நிலையில் சீரகசம்பா,பாஸ்மதி அரிசி என புதியவைகள் பிரியாணி செய்ய கண்டுபிடிக்கப்பட்டது . அத்துடன் விஞ்ஞான ரீதியாக நீரிழிவு பாதிப்புடன் அரிசி உணவை சம்பந்தப்படுத்தி ஆய்வுகள் பயமுறுத்த உடனே கருப்புக் கவுனி , மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட இயற்கை முறை ஆர்கானிக் அரிசி ரகங்கள் உருவாக்கப்பட்டு தற்போது சந்தைகளில் கிடைக்கிறது.

இந்த வரிசையில், தற்போது சாதாரண அரிசியை விட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்ள 'டிசைனர் அரிசி' (Designer Rice) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

யார் கண்டுபிடித்தது?

கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தில் செயல்​படு​ம் மத்​திய அரசின் அறி​வியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் இயங்கும் தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIIST) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்புகளில் ஆரோக்கிய உணவு தொடர்பான ஆய்வுகள் மூலம் உருவான உயர் புரதம் கொண்ட “designer rice” டிசைனர் அரிசி கவனம் பெறுகிறது. சாதாரண அரிசியில் இல்லாத கூடுதல் சத்துக்கள் அல்லது சிறப்பு பண்புகள் சேர்க்கப்பட்ட அரிசி வகைகளே “டிசைனர் அரிசி”. எனப்படுகிறது. மரபணு மாற்றம் (Genetic Modification)தாவர இனப்பெருக்க மேம்பாடு (Plant Breeding) உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) அடிப்படையில் இந்த புதிய அரிசி ரகங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.

டிசைனர் அரிசி சாதாரண அரிசியைப் போலன்றி அதிக புரோட்​டீன், இரும்புச் சத்​து, போலிக்அமிலம், வைட்​ட​மின் பி12 உள்ளிட்ட ஊட்​டச் சத்​துகள் ஆகியவைகளுடன் சாதாரண அரிசி​யை​விட 3 மடங்கு அதிக புரதம், குறைந்த க்ளைக்கெமிக் குறியீட்டு வடிவத்தில் உருமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்​பாக அந்நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், "டிசைனர் அரிசி ரகம் தொடர்​பான தொழில்​நுட்​பம், டாடா கன்​சி​யூமர் புராடக்ட்ஸ், திருப்​பூரை சேர்ந்த எஸ்​எஸ் சோல் புட்ஸ் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்படவுள்ளது.இந்த ஒப்பந்தப் பரிமாற்றம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள அதிக ஊட்டச்சத்து தற்போதைய ஹெல்த் பிரச்சினையான ஊட்​டச்​சத்து குறை​பாட்டிற்கு தீர்வு தரும். மேலும் டிசைனர் அரிசி​யில் கிளைசெமிக் இன்​டெக்ஸ் (ஜிஐ) (Glycemic Index (GI) )அளவு மற்ற அரிசி வகைகளை விட மிக​ குறை​வாக உள்​ளதால் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுதானிய கலவை அரிசி ,பழுப்பு அரிசி (Brown Rice),ஆர்கானிக் அரிசி , பாலிஷ்டு அரிசி (Polished Rice) என ஏற்கனவே இருக்கும் அரிசி வகைகள் வரிசையில் சேரும் இந்த டிசைனர் அரிசியும் உடல் நலம் தரும் என நம்புவோம்.

இதையும் படியுங்கள்:
சொத்து வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்..! 6% வரி உயர்வு தற்காலிக நிறுத்தம்..!
Rice

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com