மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் 16, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 6 என மொத்தம் 22 உள்ளன.
துறைகள் : மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம்
காலியிடங்கள் : 22
பணிகள் : Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha)
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்
கடைசி தேதி : 15.11.2025
பணியிடம் : இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம் : https://cwceportal.com/careers/
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் (Central Warehousing Corporation – CWC) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
Junior Personal Assistant: 16 காலியிடங்கள்
Junior Executive (Rajbhasha): 06 காலியிடங்கள்
மொத்தம்: 22 காலியிடங்கள்
கல்வித் தகுதி
CWC ஆட்சேர்ப்பு 2025-ல் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:
Junior Personal Assistant : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduate), மற்றும் Office Management and Secretarial Practice ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு படிப்பு/ அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் (Shorthand) ஆங்கிலத்தில் 80 WPM வேகமும், தட்டச்சு (Typing) ஆங்கிலத்தில் 40 WPM வேகமும் கட்டாயம். (இந்தி சுருக்கெழுத்து/தட்டச்சு தெரிந்தவர்களுக்கு கூடுதல் விருப்பம்.)
Junior Executive (Rajbhasha) : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தியை ஒரு விருப்பப் பாடமாகவும், ஆங்கிலத்தை ஒரு முக்கியப் பாடமாகவும் கொண்ட பட்டப்படிப்பு (Graduate) அல்லது BA-க்கு சமமான இந்தியில் பட்டம்/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். (இந்தி மென்பொருள் பயன்பாட்டில் திறமை உள்ளவர்களுக்கு கூடுதல் விருப்பம்.
வயது வரம்பு விவரங்கள்:
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் (CWC) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் பின்வரும் தளர்வுகள் உண்டு:
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
PWD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
PWD (UR) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள் :
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் Junior Personal Assistant மற்றும் Junior Executive (Rajbhasha) ஆகிய இரு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
CWC உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
ஆன்லைன் தேர்வு மற்றும் திறன் தேர்வு (Online Exam & Skill Test): தட்டச்சு (Typing) மற்றும் சுருக்கெழுத்து (Stenography) தேர்வுகள் நடத்தப்படும்.
ஆவணச் சரிபார்ப்பு (Document verification): மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500/- SC, ST, PwBD, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Serviceman) மற்றும் பெண்கள் (Women)
ரூ.1,350/- பொது (Unreserved – UR), EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்
கடைசிநாள்: 15.11.2025
எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 1511.2025 தேதிக்குள் www.cwceportal.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்