'தங்கல்' பட அமீர்கான் மகள் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Dangal Actor Suhani
Dangal Actor Suhani
Published on

தங்கல் படத்தில் அமீர்கான் மகளாக நடித்த 19 வயது நடிகை திடீரென மரணமடைந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர் கான் தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'தங்கல்'. மல்யுத்த வீராங்கனைகளின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை, நிதீஷ் திவாரி இயக்கி இருந்தார். இந்த படத்தில் இளம் வயது பபிதாவாக நடித்து பிரபலமானார் சுஹானி பட்னாகர்.

இப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் பக்கம் வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக எடுத்துக் கொண்ட மாத்திரைகள், பக்க விளைவுகளைக் கொண்டு வந்ததாகவும், அதன் எதிர்வினையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் புஷ்பா 2... குஷியான ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்!
Dangal Actor Suhani

19 வயதே ஆன சுஹானி பட்னாகர், திடீரென மறைந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு தற்போது திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் இளம் வயது மரணம் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com