மாநில அரசு அதிரடி : அலுவலகத்திற்கு 50% பேர் தான் வரவேண்டும்..!

50% Work From Home
Air pollution
Published on

தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டைக் குறைக்க டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், 50% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய (Work From Home) அனுமதிக்க வேண்டும் என கடந்த மாதம் அரசு அறிவித்தது.

இந்நிலையில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் உத்தரவை மீறும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது டெல்லி அரசு.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் காற்று மாசுமாட்டால் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் காற்றின் தரம் குறைந்து வருவதால், பண்டிகைகளின் போது பட்டாசு வெடித்தல் முதல் வாகனங்களை பயன்படுத்துதல் வரை பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. இதன்படி பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்கள் இயங்குவதைக் குறைக்க மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் மதிய நேரத்திற்குப் பிறகு நீதிமன்றங்கள் இயங்குவதில்லை. வழக்குரைஞர்கள் கூட ஆன்லைனில் ஆஜராகி தான் வழக்குகளை வாதாடி வருகின்றனர். இப்படியான சூழலில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களில் 50% பேருக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என டில்லி அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஒரு சில தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல் உள்ளன.

இந்நிலையில் 50% ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதியை வழங்காத நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் தற்போது முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. காற்று மாசுபாட்டால் பொதுமக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுவதாக அம்மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
நாட்டில் காற்று மாசு குறைவான நகரங்களில் தமிழ்நாடு தான் டாப்..!
50% Work From Home

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக, கட்டுமான பணிகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) அடிக்கடி ‘மோசம் (Poor)’ அல்லது ‘மிகவும் மோசம் (Very Poor)’ என்ற நிலையில் தான் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 494 ஆக இருந்த காற்று தரக் குறியீடு, நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில் 390 ஆக குறைந்துள்ளது. டெல்லி அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் காற்றின் தரக் குறியீடு குறைந்துள்ளது.

இருப்பினும் இந்த அளவே அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், காற்று மாசுபாட்டைக் குறைக்க டெல்லி அரசு முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
அதிர்ச்சி ரிப்போர்ட்: இந்தியாவில் காற்று மாசுபாட்டால் மட்டும் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்..!
50% Work From Home

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com