தேடி தேடி பிடிக்கும் டெல்லி போலீஸ்:நீட் போராட்டத்தில் ஊடுருவிய 101 கொலை குற்றவாளிகள்!

நீட் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 2873 பேரில் 101 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என டெல்லி காவல்துறை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
Neet violence
Delhi violence Instagram Facebook
Updated on

சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததால் , நீட் தேர்வு ரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் டெல்லியில் போராட்டம் தொடங்கியது. இதில் கலந்துக் கொண்ட சோனம் வாங்சுங் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியதால் , போராட்டம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் சென்ற போது , காவல்துறைக்கும் அவர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரக்கார்கள் அங்கிருந்த காவல்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர் , காவல்துறையினர் , செய்தியாளர்கள் உள்பட பலரும் தாக்கப்பட்டனர். அவர்களின் தாக்குதலை தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் , தண்ணீர் பீச்சியடித்தும் விரட்ட நினைத்தனர். இதை தொடர்ந்து காங் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரகமர் வீட்டு வாசலில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதான் சௌதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு , நீட் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் ஒரு குழு அமைத்தது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கையின் படி, போராட்டக்காரர்கள் மீது அரசாங்கம் சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற உறுதி பெறப்பட்டது. இதையடுத்து 37 நாள் போராட்டம் ஜூலை 25 அன்று கைவிடப்பட்டது.

காவல்துறையினர் ஜூலை 20 ஆம் தேதி, நடைபெற்ற வன்முறைக் காட்சிகளை சிசிடிவி பதிவுகளின் மூலம் ஆராய்ந்ததில் முதற்கட்டமாக 2873 பேர் அடையாளம் கண்டறியப்பட்டனர். அதில் 989 பேர் மீது கொலை , கொள்ளை , பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல் , வழிப்பறி ஆகிய குற்றங்களின் பின்னணி உள்ளது கண்டறியப்பட்டது.

காவல்துறையினர் அரசிடம் அளித்துள்ள அறிக்கையின்படி அடையாளம் காணப்பட்டவர்களின் 101 பேர் கொலை வழக்குகளிலும், 284 பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளிலும், 92 பேர் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களிலும் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்.

Delhi neet violence
Media woman &DSP attacked X

மேலும் இந்த பட்டியலில், வழிப்பறி வழக்குகளில் 135 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுத சட்டத்தின் கீழ் 229 பேர் மீதும் , போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் 67 பேர் மீதும் , 19 பேர் மீது ஆட்கடத்தல் வழக்குகளும் ஏற்கனவே உள்ளன. இந்த பட்டியலில் உள்ளவர்கள் முன்பே பலமுறை பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்குகளை சந்தித்து வருபவர்கள். தற்போது டெல்லி காவல்துறை இவர்களை தேடி பிடித்து வருகிறது.

இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் வெற்றிக் களிப்பில் பார்ட்டி கொண்டாடும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். இதைக் கண்ட காவல்துறையால் தேடப்படும் பல நபர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பீஹாரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உபி மாநிலத்தை சேர்ந்தவர்களை தேடிப் பிடித்து , அம்மாநிலத் காவல்துறை சிறையில் அடைத்து வருகிறது. போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது காவல்துறையால் பதியப்பட்ட FIR ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும் , இல்லாவிட்டால் நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்!
Neet violence
இதையும் படியுங்கள்:
உங்க போனில் உள்ள இந்த OTT ஆப்கள் இனி வேலை செய்யாது - மத்திய அரசு அதிரடி..!
Neet violence
logo
Kalki Online
kalkionline.com