டெல்லியில் வெடித்தது போராட்டம்! 2,000 சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்;
சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு
சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்புsource:rediff
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் CJP (Cockroach Janta Party) மற்றும் பிற அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 20 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கம்பெனிகளை டெல்லிக்கு அனுப்பி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகவும், நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது. பதிலுக்கு போலீசார் மீது கல் வீச்சு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவர்களும், இளைஞர்களும் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிவதால் டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிஆர்பிஎஃப் கம்பெனியில் சுமார் 100 வீரர்கள் இருப்பார்கள். அந்த வகையில் 2,000 வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய போராட்டங்களின் பொழுது வன்முறை வெடித்ததாலும், கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதாலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 கம்பெனி சிஆர்பிஎஃப் மற்றும் விரைவு அதிரடிப்படை(RAF) வீரர்கள் டெல்லி காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு
சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்புsource:hindustantimes

தொடர்ந்து நடைபெற்று வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகியவற்றிற்கு மத்தியில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, டெல்லியில் கூடுதலாக 20 மத்திய ரிசர்வ் காவல் படை நிறுவனங்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய இரவு பணியமர்த்தல் உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து தேசிய தலைநகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட தொடங்கினர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக இந்தப் படைப்பிரிவுகள் முதலில் மேற்கு வங்கத்தில் நிலை நிறுத்தப்பட்டதாகவும், மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்கவே அவை அங்கு தங்கி இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

தலைமை நீதிபதியின் போராட்டங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களின் போது பல வன்முறை மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் அதன் சிறப்பு கலவரத் தடுப்புப் பிரிவான விரைவு அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) ஆகியவற்றின் சுமார் 30 கம்பெனிகளை மத்திய அரசு டெல்லி காவல்துறைக்கு வழங்கி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
வெளியான பகீர் ரிப்போர்ட்..! தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ-க்கள் மீது குற்ற வழக்குகள்..! முதலிடத்தில் தவெக!
சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு
இதையும் படியுங்கள்:
வசனங்களே கிடையாது..பாடல்கள் தான் பேச்சே! தெலுங்கு திரையுலகில் ஒரு புதிய புரட்சி படைத்த 'சிங் கீதம்'!
சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு
logo
Kalki Online
kalkionline.com