அமெரிக்காவிலிருந்து சுமார் 205 இந்தியர்களை நாடு கடத்தப்படவுள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கமலா ஹாரீஸுக்கும் ட்ரம்புக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. இதில் டொனால்ட் டரம்ப் வெற்றிபெற்றார். இதனையடுத்து சில நாட்கள் முன்னர் அவர் அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்றவுடனே பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
அதேபோல், மக்கள் சட்டவிரோதமாக குடியேறி வந்தார்கள். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக 538 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதாவது 7,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தில் வசித்து வரும் ஜெசிகா எம்.வேகன் அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கல்வி சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
இப்படியான நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களை நாடு கடத்த திட்டமிட்டனர். இதன் முதற்கட்டமாக இன்று 205 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த விமானம் இன்று டெல்லியை வந்தடையும் என்று கூறப்படுகிறது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து அவர்களை ராணுவ விமான மூலம் திருப்பி அனுப்புவோம் என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் அனைத்து நாட்டவர்களையும் அந்த நாட்டு அரசு நாடு கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.