தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 2ம் தேதி மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ...!

திமுக வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் வரும் அக்டோபர் 2-ம்தேதி முக ஸ்டாலின் பிராசரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
mk stalin road show
mk stalin road showimage credit-mid-day.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான முக ஸ்டாலின் வருகிற அக்டோபர் 2-ம் தேதி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 9-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் திமுக சாா்பில் மதுராந்தகம் வேட்பாளராக இ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதி வேட்பாளராக செள.சுகன்யாவும் அறிவிக்கப்பட்டுள்ளனா். மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்த இரு தொகுதி வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இடைத்தேர்தலையொட்டி ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அங்கு முகாமிட்டுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக, அதிமுக, தவெக கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி பிரமுகரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பணி, கட்சி நிர்வாகிகளின் பணிகள் குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் வரும் அக்டோபர் 2-ம்தேதியும், மதுராந்தகத்தில் அக்டேர்பர் 3-ம்தேதியும் முக ஸ்டாலின் பிராசரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உதயநிதி ஸ்டாலின் கைது: அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்..!!
mk stalin road show

அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் தாராபுரம் நகரின் முக்கிய அடையாளமான அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை வரை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்த வாகனத்தில் சாலை வலம் வந்து பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோடு ஷோவின் போது வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின்
முக ஸ்டாலின்Image credit- thesouthfirst.com

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தாராபுரத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்தும், அரசின் சாதனைகளை விளக்கியும் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாராபுரம் தொகுதி திமுக நிர்வாகிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 25-ம்தேதி மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 30-ம்தேதி தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படியுங்கள்:
"என் தாடை உடைந்தது உண்மைதான்!" - விஜய்க்கு ஸ்டாலின் வீடியோ மூலம் பதிலடி!
mk stalin road show

மேலும் அக்டோபர் 4ஆம் தேதியன்றும் அவர் ருத்ராவதியில் தொடங்கி குண்டடம், தாராபுரம், மூலனூர் வழியாக தாசர்பட்டி வரை ரோடு ஷோ (Roadshow) மூலம் வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com