

டிஜிட்டல் விவசாயத் திட்டத்தின் (Digital Agriculture Mission) கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் கார்டு போன்ற ஒரு பிரத்யேக 'டிஜிட்டல் விவசாய அடையாள அட்டை' (Farmer ID / AgriStack) வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 'அக் ரிஸ்டேக்' வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், 11 கோடி விவசாயிகளுக்கு 11 இலக்க தனித்துவ அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 26% பேர் பெண்கள் ஆவர். மொத்தமுள்ள 11 கோடி விவசாயிகளில், ஏறத்தாழ 81% பேர் குறு மற்றும் சிறு விவசாயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
மத்திய வேளாண் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ், இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒரு தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதற்காக, இந்த விவசாயி அடையாள அட்டைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் செல்வதையோ அல்லது வெவ்வேறு திட்டங்களுக்காக ஒரே ஆவணங்களைச் சமர்ப்பிப்பதையோ விவசாயி அடையாள அட்டை முறை கணிசமாகக் குறைக்கும்.
முன்னதாக, விவசாயிகள் பல்வேறு பலன்களைப் பெறுவதற்காக அடிக்கடி ஆவணங்களை வழங்க வேண்டியிருந்தது, இதன் விளைவாக நேரமும் பணமும் வீரயமாகின. விவசாயி அடையாள அட்டைகள் மூலம், பல முக்கிய சேவைகளைப் பெறுவது எளிமையாகவும் மேலும் வெளிப்படையாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் விவசாய அடையாள அட்டை (Digital Farmer ID / Kisan Pehchaan Patra) என்பது மத்திய அரசின் அக்ரிஸ்டாக் (AgriStack) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய பிரத்யேகமான டிஜிட்டல் அடையாள எண் மற்றும் அட்டையாகும்.
இது ஆதார் போன்ற ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளமாகும். இது மாநிலத்தின் நிலப் பதிவேடுகளுடன் இயங்குநிலையில் இணைக்கப்பட்டு, மக்கள்தொகை விவரங்கள், பயிரிடப்பட்ட பயிர், உரிமை விவரங்கள் போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் AgriStack என்ற கட்டமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்த டிஜிட்டல் விவசாய அடையாள அட்டை (Digital Farmer ID) பற்றிய முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் இதோ:
* இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பிரத்யேக டிஜிட்டல் ஐடி வழங்கப்படும்.
* பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
* வங்கிகளில் எளிதாகக் குறைந்த வட்டியில் விவசாயக் கடன் பெற இது உதவுகிறது.
* காகிதப் பயன்பாட்டை குறைப்பதுடன், அரசுத் திட்டங்கள், வங்கி கடன்கள், பயிர்க் காப்பீடு, மற்றும் பேரிடர் நிவாரண உதவிகள் பெறுவதற்கும், வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதற்கும் எந்தவொரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை.
* நிவாரண உதவிகள், உண்மையான மற்றும் தகுதியுள்ள விவசாயிகளை மிக விரைவாகச் சென்றடையும்.
* பி.எம் கிசான் (PM-Kisan) நிதியுதவி, உரம் மானியம், பயிர்க் காப்பீடு, அரசு வழங்கும் விவசாயக் கடன்கள் மற்றும் மற்றும் மானியங்கள் போன்ற அனைத்தையும் பெற இந்த ஒரே கார்டு போதும். மேலும் அரசு உதவிகள் அனைத்தையும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளைச் சென்றடையும்.
* இந்த அடையாள அட்டை விவசாயிகளின் நில ஆவணங்கள் (Land Records) மற்றும் அவர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்படும்.
* வங்கிகள் விவசாயிகளின் விவரங்களை எளிதாகச் சரிபார்த்து, பயிர்க்கடன்களை விரைவாக வழங்க இது உதவும்.
* உண்மையான விவசாயிகள் மட்டுமே நேரடியாகப் பயன் பெறுவதை இது உறுதி செய்யும்.
* மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் தேவை தவிர்க்கப்படுகிறது. இதனால் தேவையற்ற ஆவணப் பணிகள் மற்றும் அலைச்சல்கள் குறையும்.
* ஒவ்வொரு முறை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போதும் நிலப் பத்திரங்கள், சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
* இதன் மூலம் மண்ணின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பயிர் ஆலோசனைகளை நேரடியாகப் பெறலாம்.
* சந்தை நிலவரங்கள் மற்றும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான டிஜிட்டல் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
(விவசாயி ஐடி கார்டு) அடையாள அட்டையில் என்ன இருக்கும்?
விவசாயியின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இந்த கார்டு வழங்கப்படும். இதில் விவசாயியின் தனிப்பட்ட விவரங்கள் மட்டுமின்றி, அவர்களது நிலத்தின் அளவீடு, இருப்பிடம் மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் பயிரிடும் பயிர்கள் குறித்த டிஜிட்டல் தரவுகளும் (Crop Sown Registry) அக்ரிஸ்டாக் அமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
விவசாய அடையாள அட்டை பெற தேவைப்படும் ஆவணங்கள்:
ஆதார் கார்டு,
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்,
வங்கி கணக்கு புத்தகம்
நில விபரங்கள் (சர்வே எண் / உட்பிரிவு எண்).
இந்த விவசாய அடையாள அட்டையை (Farmer ID) பெறுவது எப்படி?
கிராம பஞ்சாயத்து அளவில் வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் சிறப்புப் பதிவு முகாம்களில் நேரடியாகப் பதிவு செய்யலாம்.
அருகில் உள்ள பொது சேவை மையம் (CSCs / Jan Seva Kendras) அல்லது வட்டார வேளாண்மைத் துறை அலுவலகங்கள் மூலமாகவும் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இதற்கென உள்ள பிரத்யேக Tamil Nadu Farmer Registry இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களது ஆதார் எண், மொபைல் எண் மற்றும் நில விபரங்களை உள்ளிட்டு நேரடியாகவே இ-கேஒய்சி (e-KYC) செய்து கொள்ளலாம்.
- வேளாண் சேவை வழங்குதலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வலுப்படுத்துவது, தகுதியுள்ள எந்தவொரு விவசாயியும் அரசின் நலத்திட்டங்களிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.