அட்சய திருதியை அன்று குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டு சிறை..!!

அட்சய திருதியை அன்று குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டு சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும என எச்சரிக்கப்பட்டுள்ளது.
child marriage
child marriage
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இந்திய சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆணுக்கு நடக்கும் திருமணம் குழந்தை திருமணம் எனப்படும், இது சட்ட விரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற திருமணங்கள் அக்குழந்தைளின் கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளை பறிக்கும் சமூக அவலமாக கருதப்படுகிறது. இத்திருமணத்தை நடத்துபவர்கள், ஊக்குவிப்பவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனை மற்றும் ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இத்திருமணத்தால் இளம் வயது கர்ப்பம், ஆரோக்கிய குறைபாடும் மற்றும் குடும்ப வன்முறைக்கும் வழிவகுக்கிறது. வருகிற 19-ம்தேதி அட்சய திருதியை ஆகும். அக்ஷய திருதியை போன்ற நாட்களில் குழந்தை திருமணம் நடக்க நடக்க இருப்பதாக புகார்கள் வந்துள்ளதால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் குழந்தை திருமணங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஏ. குலோத்துங்கன் எச்சரித்துள்ளார்.

அட்சய திருதியை போன்ற விழாக்காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளதால் அதனை தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேலுள்ள ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்பவர் எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப்பூர்வமான அல்லது சட்டவிரோதமான எந்த ஒரு நபரும் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை திருமணத்தை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் பங்கேற்பது மற்றும் அதை தடுக்க தவறினால் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் 2006 (Prohibition of Child Marriage Act, 2006)பிரிவு 9, 10, 11-ன் கீழ் 2 ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஆகையால் வருகிற 19-ம்தேதியன்று அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கும், 181 மகளிர் உதவி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குழந்தை திருமண தடைச் சட்டம் (https://tnsocialwelfare.tn.gov.in/ta/node/6538) மற்றும் childlineindia.org.en2ta.search.translate.goog விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைத் திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை: 2442 பேர் கைது, பெண்கள் போராட்டம்!
child marriage

இருப்பினும், கடந்த காலங்களில் இத்தகைய நாட்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பான எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com