களைகட்டிய தீபாவளி: ஜி.எஸ்.டி. குறைப்பால் இந்த பொருட்களின் விலை மிகவும் குறைந்தது..!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் ஏ.சி. விற்பனை கொடி கட்டி பறந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
diwali sales hike
diwali sales hike
Published on

ஜி.எஸ்.டி. குறைப்பின் மூலம் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு மக்களுக்கு கிடைத்துவிட்டது. கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. மேலும், இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கும் வந்தது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைய தொடங்கியது

அந்த வகையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் நன்மைகள் குறைக்கப்பட்ட விலைகளின் வடிவத்தில் நுகர்வோரை சென்றடைகின்றன. ஜி.எஸ்.டி. குறைப்புகளின் பலனை உற்பத்தியாளர்கள் பகிர்ந்து கொண்ட 54 அன்றாட பயன்பாட்டு பொருட்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் டி.வி.க்கள் போன்ற நுகர்வோர் பொருட்களும் அடங்கும்.

தீபாவளி பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அந்த வகையில் வாகனங்களின் விற்பனை ஜி.எஸ்.டி. குறைப்புக்கு பின்னர் அதிகரித்துள்ளது. 3 சக்கர வாகன ஏற்றுமதி 5.5 சதவீதமாக அதிகரித்து, 84 ஆயிரம் யூனிட்டுகளாகவும், 79 ஆயிரமாக இருந்த மோட்டார் சைக்கிள் விற்பனை 21.60 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
இன்றும், நாளையும் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்: எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும்?
diwali sales hike

அதே நேரத்தில் தங்கத்தின் விலை சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் சில நாட்களாக தங்கம் விற்பனை மந்தமாகவே இருந்ததது. ஆனால் கடந்த இரு நாட்களாக (அக்டோபர் 18, 19-ம்தேதி) தங்கம், வெள்ளி ஆபரணங்கள் விற்பனை அமோகமாக நடந்ததாக விற்பனையாளர் கூறியுள்ள நிலையில், அதேபோல் இன்றும், நாளையும் அதன் விற்பனை நன்றாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையால் அதிகளவில் வெள்ளி-தங்க நாணயங்களை மக்கள் வாங்குவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் துணி வியாபாரத்தை பொறுத்தவரை இந்தாண்டு பெரும்பாலான கடைகளில் ‘காம்போ ஆபர்’ மக்களை அதிகளவு கவர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி.யில் துணி விலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், ரூ.2,500-க்கு மேலான துணிக்கு மட்டும் 18 சதவீத ஜி.எஸ்.டி. விலை இருப்பதால் அந்த துணி விலை மட்டும் சற்று அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் ஏ.சி. விற்பனை கொடி கட்டி பறந்தது என்று வியாபாரிகள் கூறுகின்றனர். அதாவது ஜி.எஸ்.டி. குறைப்பால் இந்த பொருட்களின் விலை மிகவும் குறைந்து இருந்தது. அதாவது ஜி.எஸ்.டி. சீர்சீருத்தம் வருவதற்கு முன்பாக அதாவது செப்டம்பர் 22-ந் தேதிக்கு முன்பாக இந்த பொருட்களின் விலையை தற்போது ஒப்பிடும்போது குறைந்தது 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது.

முன்பு ரூ.20 ஆயிரத்திற்கு விற்ற வாஷிங் மெஷின் இப்போது ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ.17 ஆயிரத்திற்கு வந்து விட்டது. இதே போல் பிரிட்ஜ், ஏ.சி. விலையும் குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் ஏ.சி விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
GST வரியில் வரப்போகும் மாற்றம்.. அடியோடு மாறும் விலை... கார், பைக்குகளின் விலை குறைய வாய்ப்பு?
diwali sales hike

மேலும் தொடர் விடுமுறை காரணமாக இன்றும் நாளையும் (அக்டோபர் 20,21-ம்தேதி) இவற்றின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com