பால் கறந்து கொடுத்து ஆதரவு திரட்டிய வேட்பாளர்..!

dmk candidate
dmk candidate
Updated on

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், நங்கவரம், நச்சலூர் உள்ளிட்ட 59 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நங்கவரம் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர் பால் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.

அப்பொழுது அங்கிருந்த பெண் விவசாயி ஒருவரை பசு மாட்டில் பால் கறந்து கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அப்பொழுது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : நிரந்தரமாக போர் முடிவுக்கு வர ஈரான் விதித்த 10 அம்சங்கள்..!
dmk candidate
logo
Kalki Online
kalkionline.com