#BIG NEWS : நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதியக் கோரி மனு தாக்கல்..!

nainar nagendran
nainar nagendransource:dailythanthi
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பொழுது நெல்லை விரைவு ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், பாஜகவின் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை (ED) வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் அவருடைய தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அது நெல்லை விரைவு ரயிலில் தாம்பரத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தும் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்பதால் வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு சம்பந்தப்பட்ட இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வது அவசியம் என்றும் கிரிராஜன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : பாஜக உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியீடு..! 27 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் யார், யார்?
nainar nagendran
logo
Kalki Online
kalkionline.com