#BREAKING : திமுகவில் இனி 110 மாவட்ட செயலாளர்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

திமுகவில் 110 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து அறிவிப்பு வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
முக ஸ்டாலின்|ஸ்டாலின் அறிவிப்பு
முக ஸ்டாலின்Image credit- thesouthfirst.com
Updated on

திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வகையில், கட்சி மாவட்டங்களை மறுசீரமைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல அதிரடியான மாற்றங்களை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காகவும், நிர்வாகத்தை மக்கள் அளவில் கொண்டு செல்வதற்காகவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் திமுக செயற்குழு கூட்டத்தில் திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி, ஒவ்வொரு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் புதிய கட்டமைப்பு மாற்றங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகவும், பதவிக்காலம் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகரச் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை, கோயம்புத்தூர், தாம்பரம் போன்ற முக்கிய நகரங்களில் 'மாநகரச் செயலாளர்' என்ற பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் (சுமார் 30,000 முதல் 40,000 வாக்காளர்களுக்கு ஒரு குழு) நிர்வாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட உள்ளன.

எந்தவொரு உள்கட்சிப் பதவியிலும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே தொடர்ந்து பதவி வகிக்க முடியும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக மாவட்டங்களைப் பிரித்து இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

DMK MP meeting
DMK MP meeting |ஸ்டாலின் அறிவிப்பு

அதன்படி, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

2 சட்டமன்ற தொகுகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை 4 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளார்.

ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை மட்டும் 10 மாவட்டங்களாக பிரித்து அறிவித்துள்ளார்.

சென்னை 10, திருவண்ணாமலை 4, தஞ்சாவூர், கடலூர் தலா 4, சேலம் 5 என திமுக கட்சி மாவட்டங்களாக பிரித்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மொத்தமாக மாறும் திமுக.!ஒருவருக்கு 2முறை மட்டுமே பதவி: மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் மூவ்.!
முக ஸ்டாலின்|ஸ்டாலின் அறிவிப்பு

அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் 3 தொகுதிகளை கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வட்ட – கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மாவட்ட செயலாளர் எனும் பொறுப்பு இனி இல்லை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முக ஸ்டாலின்|ஸ்டாலின் அறிவிப்பு

தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com