#BREAKING: மொத்தமாக மாறும் திமுக.!ஒருவருக்கு 2முறை மட்டுமே பதவி: மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் மூவ்.!

சீனியர்களுக்கு கலக்கமா? இளைஞர்களுக்கு வாய்ப்பா? திமுக உட்கட்சித் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் சர்ப்ரைஸ் மூவ்!
DMK
DMK
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்ப்பாராத விதமாக தோல்வியை தழுவி எதிர்க்கட்சி அந்தஸ்தை மட்டுமே பெற்றது. எப்படியும் இம்முறையும் திமுக ஆட்சியை பிடித்து விடும் என்றே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நிர்வாகிகள் பலரும் கருதிய நிலையில், அரசியலில் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்தார்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழு அளித்த முதல்கட்ட அறிக்கையின் படி, திமுக-வில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கியது. அதோடு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தேர்தலுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 22) சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் அதிர்ச்சி.!! ஒரே வாரத்தில் ரூ.5,440 உயர்வு.! புதிய உச்சத்தில் தங்கம் விலை.!
DMK

செயற்குழு கூட்டத்தில் திமுக-வின் உள்கட்சி அமைப்பை மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள்:

* தற்போது திமுகவில் 78 மாவட்ட செயலாளர்களே இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

* பதவிகளுக்கு ஏற்ப மாவட்ட செயலாளர்களின் உச்சபட்ச வயது 70 ஆக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஒன்றிய கழகச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயம்.

* கிளைக்கழக செயலாளருக்கு அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயம்.

* கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை ஒருவர் இருமுறை மட்டுமே பதவியில் இருக்க முடியும்.

* சராசரியாக 30,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய கழகம் உருவாக்கப்பட வேண்டும்.

உட்கட்சி தேர்தல்:

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படியே தற்போது மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை ஜனநாயக முறைப்படி உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, அதன் மூலம் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படும் என திமுக தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் பொறுப்புக்கு கால நிரணயம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவரே தொடர்ந்து பதவியில் இருப்பது தடுக்கப்படும். மேலும் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவம்:

திமுகவில் தற்போது உள்ள 78 மாவட்ட செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், திமுக செயற்குழு கூட்டத்தில் பட்டியலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன் தொடங்கிய திமுக செயற்குழுக் கூட்டத்தில் 864 செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளைக் கடந்தும் வலிமையோடு இருப்பதற்கு அமைப்பு முறை தான் காரணம். கம்பேக் கொடுப்பதில் நாம் தான் ஸ்பெஷலிஸ்ட். தேர்தலில் தோல்வி அடைந்தோமே தவிர நிரந்தரமாக இல்லை” எனக் கூறினார்.

DMK
DMK
இதையும் படியுங்கள்:
46 பைசா பாக்கிக்கு ரூ.1,200 அபராதம்: கிரெடிட் கார்டு வலையில் சிக்கும் இளைய தலைமுறை!
DMK

திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்ப்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மக்களவை தேர்தலில் திமுகவின் பலம் கடந்த தேர்தலைப் போலவே தொடர முன்னெடுப்புகள் எடுக்கப்பட உள்ளன. சட்டமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து திமுக மீண்டு வந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி எனவும் திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு இன்னும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் இவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com