இந்தியாவில் மக்கள் அதிகம் சுற்றுலா செல்லும் இடமாக தாஜ்மஹால் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு நிறைய மக்கள் சுற்றுலா சென்ற இடமாக அயோத்தி மாறியிருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு திரை உலகினரும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் நிறைய பேர் கலந்துக் கொண்டனர். அன்றிலிருந்து இந்தியா முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க வருகைத் தருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலிருந்தும் நிறைய மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருப்பதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கோவில் வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் ராமரை தரிசிக்க வருகைத் தருகின்றனர். பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இதனால், இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாதலமாக அயோத்தி இருந்து வருகிறது.
இந்த ஆண்டுதான் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஒரே வருடத்தில் உலக அதிசயத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டது. தாஜ்மஹால் உலக அதிசயம் என்பதால், உலகளவிலுள்ள மக்கள் இந்தியா வந்தால், முதலில் பார்ப்பது தாஜ்மஹால்தான். இதனால், வருடா வருடம் இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா தலமாக தாஜ்மஹால் இருந்து வந்தது.
தாஜ்மஹால் மற்றும் அயோத்தி இரண்டுமே உபியில்தான் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது உபியின் மிகப்பெரிய சுற்றுலா தலமாக அயோத்தி இருக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு மக்கள் அங்கு சென்றிருக்கின்றனர். உத்தரப்பிரதேச சுற்றுலா துறையின் அறிக்கைகளின்படி, அயோத்தியில் 135.5 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 3,153 சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
அயோத்திக்கு அடுத்து ஆக்ரா உள்ளது. 125.1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது, இதில் 115.9 மில்லியன் உள்நாட்டு மற்றும் 924,000 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் உபி முழுவதும் 480 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்திருக்கின்றனர்.
ஆக்ராவின் வெளிநாட்டு வருகை 2022-23 இல் 2.684 மில்லியனிலிருந்து 2023-24 இல் 27.70 மில்லியனாக உயர்ந்தது, அதே நேரத்தில் உள்நாட்டு எண்ணிக்கை 193,000 குறைந்துள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு தாஜ்மஹால் இன்னும் ஒரு வரலாற்று சின்னமாகவே இருப்பதால், ஏராளமானோர் வருகைத் தருகின்றனர். ஆனால், உள்நாட்டு மக்கள் அயோத்தி, வாரணாசி போன்ற இடங்களுக்கே பயணம் செய்வதாக கூறப்படுகிறது.