
இந்தியாவில் பொதுமக்கள் பலருக்கும் தங்கத்தின் மீதான மோகம் மிக அதிகம் எனலாம். மேலும் சிலர் தங்கத்தை முதலீட்டுப் பொருளாகவும் பார்க்கின்றனர். இந்நிலையில் தின்ந்தோறும் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் தங்கத்தின் விலையேற்றம் நம்ப முடியாத வகையில் இருக்கிறது. பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், உலகளாவிய பொருளாதாரம், அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் போர் பதட்டம் உள்ளிட்ட பல காரணிகளால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ.75,000-ஐ கடந்தது. இது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு தங்கத்தின் விலை குறைந்தாலும், ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளது.
இன்று (ஆகஸ்ட் 02) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.9,290-க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ரூ.123-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,23,000-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை என்னவென்று தினந்தோறும் பார்க்கும் நாம், அதனை முந்தைய தேதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறி விடுகிறோம். ஆகையால் கடந்த 15 நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். தங்கத்தின் விலையேற்ற இறக்கங்களை இதன்மூலம் நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 15 நாட்களில் தங்கத்தின் விலை:
ஆகஸ்ட் 01 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,200
ஜூலை 31 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,360
ஜூலை 30 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,680
ஜூலை 29 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,200
ஜூலை 28 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,280
ஜூலை 27 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,280
ஜூலை 26 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,280
ஜூலை 25 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,680
ஜூலை 24 - 22 காரட் 1 சவரன் - ரூ.74,040
ஜூலை 23 - 22 காரட் 1 சவரன் - ரூ.75,040
ஜூலை 22 - 22 காரட் 1 சவரன் - ரூ.74,280
ஜூலை 21 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,440
ஜூலை 20 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,360
ஜூலை 19 - 22 காரட் 1 சவரன் - ரூ.73,360
ஜூலை 18 - 22 காரட் 1 சவரன் - ரூ.72,880
கடந்த 15 நாட்களில் வெள்ளியின் விலை:
ஆகஸ்ட் 01 - 1 கிராம் - ரூ.123
ஜூலை 31 - 1 கிராம் - ரூ.125
ஜூலை 30 - 1 கிராம் - ரூ.127
ஜூலை 29 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 28 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 27 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 26 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 25 - 1 கிராம் - ரூ.128
ஜூலை 24 - 1 கிராம் - ரூ.128
ஜூலை 23 - 1 கிராம் - ரூ.129
ஜூலை 22 - 1 கிராம் - ரூ.128
ஜூலை 21 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 20 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 19 - 1 கிராம் - ரூ.126
ஜூலை 18 - 1 கிராம் - ரூ.125