

தமிழக அரசியல் வரலாற்றை பொறுத்தவரை, ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் 50 அல்லது 60 வயதை கடந்த பின்னரே முதலமைச்சராக பதவியேற்றுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநில சட்டசபையில் உறுப்பினர் ஆவதற்கும்(எம்.எல்.ஏ) மற்றும் முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கும் 25 வயது நிரம்பி இருக்க வேண்டும். இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மாநில சட்டமன்ற உறுப்பினராக (MLA) இருக்க வேண்டும். ஒருவேளை உறுப்பினர் அல்லாத ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டால், அவர் 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் ராஜாஜி கடந்த 1952-ம் ஆண்டு தனது 74 வயதில் மெட்ராஸ் மாகாண முதல் அமைச்சாரானார்.
க.காமராஜர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 50-வது வயதில் முதல் அமைச்சராக பதவியேற்றார்.
அண்ணா என்றும் அறியப்பட்ட சி. என். அண்ணாதுரை, 1967ம் ஆண்டு தனது 58-வது வயதில் தான் தமிழக முதலமைச்சரானார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு, பழனிவேல் ராஜன் (V.R. Nedunchezhiyan) 1969-ல் தற்காலிக முதலமைச்சராக மிகக் குறுகிய காலம் பொறுப்பு வகித்தார்.
அதேபோல் கருணாநிதி கடந்த 1969-ம் ஆண்டு 45 வயதில் முதல் முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.
எம்.ஜி.ஆர். கடந்த 1977-ம் ஆண்டு தனது 60 வயதில் முதல் முதலில் முதல் அமைச்சரானார்.
தமிழகத்தின் முதல் இளம் முதலமைச்சர் என்ற வரலாற்று பெருமை முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவையே சாரும். ஜெ.ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் அமைச்சராக பதவி ஏற்கும் போது அவருக்கு வயது 43 ஆகும். அந்த வகையில் ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், இளம் முதலமைச்சர்களில் ஒருவராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போதைய சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தனது 68-வது வயதில் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்.
தற்போது விஜய் கட்சியான தவெக ஆட்சி அமைப்பதாக இருந்தால் விஜய் தன்னுடைய 52-வது வயதில் முதல் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தின் 3-வது இளம் முதல்வர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.