உலகின் மிகவும் பணக்கார யூடியூபர் யார் என்பதையும், அவரின் சொத்து மதிப்பு குறித்தும் பார்ப்போம்.
இன்றைய உலகத்தில் எந்த பொழுதுபோக்குகள் இல்லாமல் வேண்டுமென்றாலும் இருந்து விடலாம். ஆனால், போன் இல்லாமலும் சமூக வலைதளங்கள் இல்லாமல் மட்டும் இருக்கவே முடியாது என்ற சூழல் வந்துள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் முக்கியமானது youtube. முன்பெல்லாம் யூடியூப் பார்த்தும், அதிலிருந்து வீடியோக்கள் பார்த்து கற்றுக்கொண்டதும் சென்று, இப்போது அதிகளவு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சாதாரண மக்கள் கூட வீடியோக்கள் போட்டு ரீச் ஆகி, புகழும் பெறுகிறார்கள், காசும் பார்க்கிறார்கள். லட்சக் கணக்கில் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
அந்தவகையில் உலகின் பணக்கார யூடியூபர் குறித்தான விஷயங்களைப் பார்ப்போம்.
மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர், அமெரிக்காவின் கேன்சஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து யூடியூபராக திகழ்ந்து வருகிறார். ஆனால் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தையடைய ஆரம்பித்தார்.
தனது வாழ்வில் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டாலும், தாராள மனமுடைய இவர், பல நன்மைகளையும் செய்துள்ளார். மருத்துவமனைகளுக்கு நன்கொடை, மரங்கள் நடுவதற்கு நன்கொடை அளிப்பது, கண்பார்வை அற்றவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து வைத்தது, தனது வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு இலவச கார், மற்றும் பெருமளவில் பணமாக பரிசளிப்பது என பல நல்ல காரியங்கள் செய்துள்ளார் ஜிம்மி டொனால்ட்சன்.
2012ம் ஆண்டு யூடியூபில் கால்பதித்த இவர், சென்ற ஆண்டு கணக்குப்படி 740 வீடியோக்கள் (தனது முதன்மை சேனலில் மட்டும்) பதிவிட்டுள்ளார். இவரது முதன்மை சேனலான மிஸ்டர் பீஸ்ட்'க்கு 141 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். 2023ம் ஆண்டு கணக்கின்படி ஜிம்மி டொனால்ட்சன் சொத்து மதிப்பு 106 மில்லியன் டாலர்களுக்கும் மேல் என அறியப்படுகிறது.
மேலும் இவர் 6 முதல் 8 சேனல்கள் வரை வைத்திருக்கிறார். யூடியூப் விளம்பரங்கள், தனியார் விளம்பரங்கள், தனது சொந்த மெர்ச்சண்டைஸ் மூலம் மாதம் 3 மில்லியன் முதல் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஜிம்மி வருமானம் ஈட்டுவதாக அறியப்படுகிறது. இவரது சேனலில் விளம்பரம் செய்ய 1 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். (ஒரே வீடியோவிற்கு) கடந்த ஆண்டு மட்டும் 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (2 மில்லியன் 21 கோடி 39 லட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய்) வரை ஜிம்மி டொனால்ட்சன் வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மெச்சண்டைஸ் எனப்படும் பொருட்கள் விற்கும் வியாபாரம் , மிஸ்டர் பீஸ்ட் பர்கர் எனப்படும் தனது சொந்த பர்கர் நிறுவனம் (செயலியும் உண்டு) போன்ற தொழில்கள் கைவசம் வைத்திருக்கிறார்.