
தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க அதனால் கிடைக்கக்கூடிய பலன்களை விட, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தான் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
‘போனில் பேங்க் ஆப்’ (Bank App on Phone) என்பது உங்கள் வங்கிக் கணக்கை மொபைல் மூலம் நிர்வகிக்க உதவும் ஒரு செயலி ஆகும். இதன் மூலம் உங்களுடைய வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்தல், பணம் அனுப்புதல், பில் செலுத்துதல், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு வங்கிச் சேவைகளை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப சொந்த மொபைல் பேங்கிங் செயலிகளை வழங்குகின்றன. மேலும், Google Pay, PhonePe போன்ற பல கட்டணச் செயலிகளும் வங்கிக் கணக்குகள், UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவுகின்றன.
இந்நிலையில் ‘போனில் பேங்க் ஆப்’ மூலமாக பணபரித்தனைகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் உங்களுடைய பணத்தை இழக்க நேரிடும் என்று வங்கிகள் எச்சரிக்கின்றன. பேங்கிங் ஆப்களை பயன்படுத்தும் நீங்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
நீங்கள் உங்கள் ‘போனில் பேங்க் ஆப்’ பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* நீங்கள் உங்கள் செல்போனில் இருந்து இன்டர்நெட் பேங்கிங் மூலமாக பணபரிவர்த்தனை செய்யும்போது உங்கள் போனில் உள்ள புளூடூத்தை (Bluetooth) அணைத்து(OFF) விட வேண்டும்.
* நீங்கள் மக்கள் அதிகம் கூடும் பொது வெளியில் இருக்கும் சமயத்தில் உங்கள் போனில் டேட்டா பேக்(data pack) இல்லையென்றால் பொதுவெளியில் இருக்கும் வைஃபையை(Wi-Fi) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதன் மூலம் உங்களுடைய போனில் உள்ள ரகசிய தகவல்கள் திருடு போக அதிக வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
அப்படி பொதுவெளியில் உள்ள வைஃபையை பயன்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக இன்டர்நெட் பேங்கிங்கை பயன்படுத்தாதீங்க. அதேபோல் பொது வைஃபையை பயன்படுத்தி விட்டு லாக் அவுட்(Log out) செய்ய மறக்காதீங்க.
* உங்களுடைய செல்போனை சர்வீஸ் அல்லது ரிப்பேருக்கும் கொடுக்கும் போது உங்களுடைய மொபைல் போனில் உள்ள பேங்கிங் ஆப் எல்லாவற்றையும் லாக் அவுட் செய்து விட்டீர்களா என்பதை மறக்காமல் ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்.
* உங்கள் மொபைல் போனுக்கு போடும் பாஸ்வேர்ட்டையே உங்களுடைய மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற அனைத்து ஆப்களுக்கும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் செல்போனுக்கு ஒரு பாஸ்வேர்ட்டையும், மற்ற வெவ்வெறு ஆப்களுக்கு தனித்தனியாக வெவ்வேறு பாஸ்வேர்ட்டை பயன்படுத்துவது நல்லது. உங்களுக்கு அனைத்து பாஸ்வேட்டையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால் டைரியில் குறித்து வைத்துகொள்ளுங்கள். ஆனால் செல்போனில் பதிவு செய்து வைக்க வேண்டாம்.
மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை நீங்கள் செய்யும் போது உங்களுடைய பணம் திருடு போக அதிக வாய்ப்புள்ளது என்பதால் உங்களுடைய செல்போனில் இன்டர்நெட் பேங்கிங்கை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.