நியூ மெக்சிகோ இனி " நியூ அமெரிக்கா" வா? – அமெரிக்காவில் வெடித்த புது பெயர் மாற்றம் சர்ச்சை!

நியூ மெக்சிகோ பெயர் மாற்றம்! டொனால்ட் ட்ரம்ப் வைத்த புதிய அதிர்ச்சி யோசனை!
டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்source:cnn
பிருந்தா நடராஜன்

என் பெயர் பிருந்தா நடராஜன். நான் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஆனந்த விகடனின் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வு பெற்று விகடன் மாணவ பத்திரிகையாளராக 1987-88 வருடம் பணியாற்றினேன். கவிதைகள் கதைகள் மற்றும் நேர்காணல் போன்ற படைப்புகள் ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் பிரசுரமாகி உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுத ஆரம்பித்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கல்கியின் பணி போற்றத்தக்கது. மேலும் பல படைப்புகள் கல்கி குழுமத்திற்கு எழுதி அனுப்புவேன். கல்கியில் என்னுடைய படைப்புகள் பிரசுரம் ஆவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

Updated on: 

அமெரிக்காவில் அரசியல் முடிவுகள் மட்டுமல்ல, பெயர் மாற்ற யோசனைகள்கூட உலகளவில் விவாதத்தைக் கிளப்புகின்றன. ஏற்கெனவே சில புவியியல் பெயர்களை மாற்றுவது தொடர்பாகப் பேசிவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என்று மாற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பரிந்துரை அந்நாட்டில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது நியூ மெக்சிகோ மாநிலம். இயற்கை வளங்கள், மலைப்பகுதிகள், பாலைவனங்கள், தனித்துவமான கலாசாரம் எனப் பல சிறப்புகளைக் கொண்ட இம்மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் தற்போதைய யோசனை.

அக்டோபர் 19 அன்று தனது சமூக வலைதளப் பதிவில், நியூ மெக்சிகோவின் பெயரை உடனடியாக ‘நியூ அமெரிக்கா’ என்று மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தின் மதிப்பும் பெருமையும் அதிகரிக்கும் என்றும் அவர் வாதிட்டார்.

இந்தக் கருத்து ஏற்கெனவே செப்டம்பர் மாதத்தில் அவர் முன்வைத்த யோசனையின் தொடர்ச்சியாகும்.இதற்கு முன்னதாக, மெக்சிகோ வளைகுடாவை ‘கல்ஃப் ஆஃப் அமெரிக்கா’ என்று அழைப்பது உள்ளிட்ட பெயர் மாற்ற நடவடிக்கைகளையும் ட்ரம்ப் முன்னெடுத்திருந்தார். இதனால், வெளிநாடுகளின் பெயர்களுடன் தொடர்புடைய புவியியல் பெயர்களை மாற்றுவதில் அவர் ஆர்வம் காட்டுவது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால், ஒரு நாட்டின் அதிபர் விரும்புவதாலேயே மாநிலத்தின் பெயரை மாற்றிவிட முடியுமா? நியூ மெக்சிகோவின் பெயர் அந்த மாநிலத்தின் அரசியலமைப்புடன் தொடர்புடையது. எனவே, பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு மாநில அளவிலான சட்ட நடவடிக்கைகளும் காங்கிரஸின் ஒப்புதலும் தேவைப்படலாம். அதிபரின் அறிவிப்பு மட்டுமே பெயர் மாற்றத்துக்குப் போதுமானதல்ல.

இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பெயர் அதன் வரலாற்றுடனும் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையது என்பதால், அதை மாற்றுவது எளிதான முடிவாக இருக்காது.ஒரு பெயர் என்பது வெறும் அடையாளச் சொல் மட்டுமல்ல. அது ஒரு பகுதியின் கடந்தகாலம், மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது. எனவே, பெயர் மாற்றம் குறித்த விவாதங்களில் மக்களின் கருத்துகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பெயருக்கு பின்னால் ஒரு வரலாறு:

நியூ மெக்சிகோ என்ற பெயரை கேட்டவுடன் அது மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதி என்று சிலர் நினைக்கலாம்.. ஆனால் நியூ மெக்சிகோ அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்றாகும்.. கலாச்சாரத்தின் தாக்கம் இம்மாநிலத்தில் இன்றளவும் காணப்படுகிறது.

அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்ட கட்டடக்கலை,உணவு வகைகள்,கலை மரபுகள் ஆகியவை இதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது..நியூ மெக்சிகோவின் வரலாறு ஐரோப்பியர்கள் அங்கு குடியேறிய காலத்துடன் மட்டுமே தொடங்குவதில்லை.

அப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த பூர்வகுடி மக்களின் பாரம்பரியமும் அதன் அடையாளத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் மொழி,கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவை மாநிலத்தின் பண்பாட்டுச் செழுமைக்குச் சான்றுகளாக உள்ளன.

Donald trump
Donald trump

பெயர் மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது அரசியல் ரீதியாக மட்டும் அல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்புகிறது ‌.சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டிகள், விளம்பரங்கள்,வணிக நிறுவனங்களின் பதிவுகள்,அரசு ஆவணங்கள்,இணைய தளங்கள் எனப் பலவற்றிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும்..

இதற்கான செலவுகளும் அதிகமாகலாம்.மேலும் சர்வதேச அளவில் ஒரு இடம் அடையாளம் காணப்படுவதற்கு அதன் பெயர் முக்கிய பங்கு வகிக்கிறது.. பழைய பெயர் பல தலைமுறைகளாக மக்களின் நினைவிலும் வரலாற்றிலும் பதிந்திருக்கலாம் ‌‌.. புதிய பெயரை ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து அவசியமாகிறது.. அதிபரின் விருப்பம் மட்டுமே ஒரு மாநிலத்தின் எதிர்கால அடையாளத்தை தீர்மானிக்க முடியாது..

மக்களின் விருப்பம், சட்ட நடைமுறைகள், வரலாற்றுப் பின்னணி ஆகியவை ஒன்றிணைந்தால் தான் இத்தகைய மாற்றம் அர்த்தமுள்ளதாக அமையும்.. பெயர் மாற்றம் குறித்த ட்ரம்ப்பின் யோசனை எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பொறுதி்திருந்துதான் பார்க்க வேண்டும்..

ட்ரம்ப்பின் இந்தப் பரிந்துரை தற்போது அரசியல் விவாதமாகவே உள்ளது; நியூ மெக்சிகோவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படவில்லை.

ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதால் அதன் பெருமை உயருமா அல்லது அதன் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதே முக்கியமா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்புகிறது. பெயர்களில் மாற்றம் செய்வதைவிட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்பதை இந்த விவாதம் நமக்கு நினைவூட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
நம்ம ஊரு சமோசா இந்தியாவில் பிறக்கவில்லையா? டீக்கடை ஸ்நாக்ஸின் சுவாரஸ்ய வரலாறு!
டொனால்ட் ட்ரம்ப்
logo
Kalki Online
kalkionline.com