டொனால்ட் டிரம்பின் புதிய AI ஆலோசகர் - இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்!

Trump and Sriram
Trump and Sriram
Published on

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், இந்திய-அமெரிக்க துணிகர முதலீட்டாளர் ஸ்ரீராம் கிருஷ்ணனை AI இன் மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் முனைவோரான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார். கிருஷ்ணன், 'ஏ.ஐ.யில் அமெரிக்கத் தலைமையைத் தொடர்வதை உறுதிசெய்வதற்கும், அரசு முழுவதும் ஏ.ஐ. கொள்கையை வடிவமைத்து ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பாவார். மேலும் இவர் வெள்ளை மாளிகையில் ஏ.ஐ. மற்றும் கிரிப்டோ கரண்சி ஆலோசனை குழு தலைவராக இருக்கும் டேவிட் ஓ.சாக்சுடன் இணைந்து பணியாற்றுவார்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்கவுள்ளார்.  டிரம்ப், தனது புதிய அரசில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் முக்கிய பதவிகளை இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு வழங்கி வருகிறார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் ஒரு இந்திய-அமெரிக்க இணைய தொழில்முனைவோர், முதலீட்டாளர், பாட்காஸ்டர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் மூலதன நிறுவனமான Andreessen Horowitz ல் பொது பங்குதாரராக உள்ளார். நெட்ஸ்கேப் நிறுவனத்தின் முக்கிய அதிபர் மார்க் ஆண்ட்ரீசன், டிரம்ப் ஆதரவாளராக இருந்து வருகிறார், மேலும் எலோன் மஸ்க்கைப் போலவே, மாற்றத்திற்கு உதவ மார்-எ-லாகோவில் முகாமிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
உணவு, உடை மற்றும் மளிகைப்பொருட்கள் தொடர்பான நுகர்வோர் உரிமைகளை அறிவோமா?
Trump and Sriram

ஸ்ரீராம்கிருஷ்ணன், புலம்பெயர்ந்தவர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள், குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்காவில் வாய்ப்புகளைத் தேடும் இடையூறுகளை போட்காஸ்ட்டில் உணர்ச்சியுடன் நிவர்த்தி செய்கிறார். இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது மனைவியுடன் இணைந்து 'தி ஆர்த்தி அண்ட் ஸ்ரீராம் ஷோ' என்ற போட்காஸ்ட் தொடரை தொகுத்து வழங்குகிறார், அமெரிக்க அரசியல் மற்றும் தொழில்நுட்ப விவாதங்கள் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.

டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, தன்னை தேர்ந்தெடுடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணன் X தளத்தில்  "நம் நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கும், @DavidSacks உடன் நெருக்கமாகப் பணியாற்றும் AI ல் அமெரிக்கத் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கும் நான் பெருமைப்படுகிறேன்" என்று எழுதியுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தார். அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அவர் Windows Azure-ன் வளர்ச்சிக்கு பங்களித்தார். அதன் APIகள் மற்றும் சேவைகளில் பணியாற்றினார். அவர் ஓ'ரெய்லிக்கு விண்டோஸ் அஸூர் புரோகிராமிங் (Programming Windows Azure for O’Reilly) புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.

இதையும் படியுங்கள்:
மழை பெய்தால் அழும் கடவுளின் கண்கள்!
Trump and Sriram

இதற்கு முன்பாக கிருஷ்ணன் 2013-ல் பேஸ்புக்கில் சேர்ந்தார், அங்கு அவர் நிறுவனத்தின் மொபைல் ஆப் பதிவிறக்க விளம்பரங்கள் வணிகத்தை அளவிடுவதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார். பின்னர் அவர் ஸ்னாப்பில் பணியாற்றினார். கிருஷ்ணன் ட்விட்டரில் (இப்போது X) 2019 வரை பணிபுரிந்தார், அங்கு அவர் தளத்தை மறுகட்டமைப்பதில் எலோன் மஸ்க்குடன் ஒத்துழைத்தார். அவர் 2021-ல் Andreessen Horowitz (a16z) இல் பொது பங்குதாரரானார். பின்னர் 2023 இல், அவர் லண்டனில் நிறுவனத்தின் முதல் சர்வதேச அலுவலகத்தை வழிநடத்தினார்.

முதலீட்டாளரான கிருஷ்ணன், இந்திய ஃபின்டெக் நிறுவனமான கிரெடில் ஆலோசகராகவும் உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com