இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் போன்றவற்றின் மாத்திரைகளில் தரம் இல்லாதது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வழக்கமாக நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக சில மாத்திரைகளை மக்கள் வழக்கமாகப் பயன்படுத்துவர். சில மாதங்களுக்கு முன்பு பாரசிட்டமல் மாத்திரை உட்பட பல மாத்திரைகள் தரநிலை சோதனையில் தோல்வியடைந்தன. உடல் வலியிலிருந்து காய்ச்சல் வரை பலர் பாரசிட்டமலைதான் பயன்படுத்துவார்கள். மருத்துவமனைக்கு செல்லாமலேயே மருந்துக் கடையில் பாரசிட்டமல் மட்டும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அந்த அளவிற்கு கண்மூடித்தனமான நம்பிக்கை சில மாத்திரைகள் மீது மக்களுக்கு உண்டு.
இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்ரியா பட்டேல் பதில் வழங்கினார்.
அதாவது, “இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் போன்றவைகள் பாராசூட்மல் மாத்திரைகளை தயாரிக்கிறது.
ஆனால் இதில் மெட்ரானிடசோல் 400 மிகி, பாராசிட்டமால் 500 மிகி மாத்திரைகள் போன்றவைகள் தரமானதாக இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.
அரசு மருந்து அதிகாரிகள் மாதாமாதம் குத்துமதிப்பாக சில மாத்திரைகளைத் தேர்ந்தெடுத்து அதன் தரத்தை சோதனை செய்வார்கள். அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் கால்சியம், விட்டமின் டி3 மாத்திரைகள், நீரிழிவு நோய் மாத்திரைகள், இரத்த உயர் அழுத்த மாத்திரைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சோதனை செய்ததில், தரச் சோதனையில் தோல்வியடைந்த விஷயம் தெரியவந்துள்ளது.
ஷெல்கால் வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஆன்டிஆசிட் பான்-டி (antiacid Pan-D), பாரசிட்டமல் ஐபி 500 மி.கி மாத்திரைகள், Glimepiride நீரிழிவு எதிர்ப்பு மருந்து, டெல்மிசார்டன் (Telmisartan) உயர் இரத்த அழுத்த மருந்து மற்றும் பல மருந்துகள், மருந்து கட்டுப்பாட்டாளரின் தரச் சோதனையில் தோல்வியடைந்தன.
அந்தவகையில் மீண்டும் சில மாத்திரைகள் தரநிலை சோதனையில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.