என்கிட்ட மோதாதே!திருப்பூர் கூட்டத்தில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த ஸ்டாலின்!

Stalin Tiruppur speech
Stalin sung songTwitter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

திருப்பூரில் தற்போது இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். தனது பேச்சை தொடங்கிய ஸ்டாலின் " எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா " என்று பாடத் தொடங்கினார். நான் தற்போது பாட்டை மாற்றிப் பாடுகிறேன் என்று கூறி " எங்கிட்ட மோதாதே இது பெரியாரின் தமிழ்நாடடா , வம்புக்கு இழுக்காதே இது அண்ணாவின் கோட்டையடா ! இனி தப்பாட்டம் என்னிடம் ஆடாதே, அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே! இதைத்தான் தற்போது தமிழகம் பாடிக் கொண்டிருக்கிறது என்றார்.

நாம் பறக்க விட்ட கருப்பு கொடி, பாஜக பறக்க விட நினைத்த காவி கொடியை வீழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் பற்றவைக்கப்பட்ட தீ நாடு முழுக்க பரவியது. அந்த வெப்பம் பாராளுமன்றத்தில் அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது. தமிழ்நாட்டின் முக்கிய காலத்தில் அதிமுகவினர் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செய்யும். அமித் ஷாவே கூறிவிட்டார் என்று கூறினார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக போன்ற நாணயமற்ற ஒரு கட்சியை உலகில் பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com