
உலகம் முழுவதும் தொப்பிகள் ஃபேஷனுக்காகவும் ஸ்டைலுக்காகவும் மக்களால் விரும்பி அணியப் படுகின்றன. பல்வேறு விதமான கலாச்சாரங்கள், புவியியல் பகுதிகள், ஃபேஷன் போக்குகள் மற்றும் பல்வேறு வயதினருக்கு ஏற்றவாறு தொப்பிகள் அணியப்படுகின்றன. இவை சூரியக் கதிர்கள் கண்களிலும் முகத்தையும் தாக்காத வகையிலும் தோல் சுருங்காமல் மற்றும் கருத்துப் போகாமல் இருக்கவும் பயன்படுகின்றன.
பந்துவீச்சாளர்கள், படகோட்டிகள், சமையல் கலைஞர்கள். காவல்துறை அதிகாரிகள், கடற் படை வீரர்கள் போன்ற பலராலும் அணியப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அன்றாட உபயோகத்திற்கான தொப்பிகள்
பேஸ் பால் தொப்பி; விளையாட்டு மற்றும் பயணங்களின் போது அணியப்படும் இது பரந்த விளிம்பு கொண்ட வைக்கோல் தொப்பியாகும். எளிமையான தோற்றத்தை. உருவாக்கும் சாதாரணமான ஆடைகள், சன் டிரஸ்கள் எனப்படும் கோடைகாலத்தில் அணியக்கூடிய ஆடைகளுக்கு ஏற்றது.
பக்கெட் தொப்பி:Bucket hat
அகலமான கீழ்நோக்கி சாய்ந்த விளிம்பு கொண்ட இந்த தொப்பி பெரும்பாலும் பருத்தி அல்லது டெனிம் துணியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சாதாரண உடைகளுக்கும் வெளியே செல்லும்போது அணியும் சற்று கிராண்டான உடைகளுக்கும் ஏற்றது.
கடற்கரை தொப்பிகள்: Beach hats
இவை சூரியத் தொப்பிகள் என்றும் அழைக்கப் படுகின்றன. கடுமையான வெயில் நாட்களுக்கு ஏற்றவாறு வைக்கோல் போன்ற லேசான பொருட்களால் செய்யப்பட்டது. அகலமான சுற்றளவும், விளிம்புகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த வகைத் தொப்பிகள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கின்றன. சாதாரண உடைகளுக்கும், வெயில் காலத்தில் அணியும் உடைகளுக்கும் ஏற்றவாறு இந்த தொப்பிகள் இருக்கும்.
படகோட்டி தொப்பி: boater’s hat
இது ஸ்கிம்மர் தொப்பி என்று அழைக்கப்படுகிறது. இது வைக்கோலால் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தி இந்த தொப்பிகள் செய்யப்படுகின்றன. தண்ணீர்பட்டாலும் உறிஞ்சாமல் நீடித்து உழைக்கும். இது கடற்கரையில் விளையாடும் போதும் பயணத்தின்போதும் அணிய ஏற்றவை.
பாபில் ஹெட்: Bobble head hat
கம்பளியால் செய்யப்படுபவை. குளிர்காலத்திற்கு ஏற்ற தொப்பிகள் இவை. தலைக்கு பொருத்தமான பாதுகாப்பு வழங்குகிறது. ஸ்வெட்டர், ஜெர்கின் அல்லது ரெயின் கோட்டுக்கும் இது மேட்ச் ஆக இருக்கும்.
போஹோ தொப்பி : Boho hat
அறுபதுகளில் இருந்த ஹிப்பிகள் இவற்றை விரும்பி அணிவார்கள். பரந்த விளிம்பு கொண்ட இந்த தொப்பி பல்வேறு முக வடிவங்களுக்கு ஏற்றது. பல்வேறு வண்ணங்கள் மற்றும் விளிம்பு அளவுகளில் வருகிறது. கவுன் போன்ற உடை அணிந்த பெண்களுக்கும் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்த ஆண்களுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.
பவுலர் தொப்பி: Bowler Hat
இது குறுகிய விளம்பி கொண்டது. சார்லி சாப்ளின் தொப்பி என்றும் அழைக்கப்படுகிறது. வயதான பெரியவர்களுக்கு இது பிடித்தமானதாக இருக்கும். வட்டமான கிரீடத்துடன் கூடிய கடினமான தொப்பி இது. ஆரம்ப காலங்களில் குதிரை சவால் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பந்து வீச்சாளர்கள் அணிகிறார்கள்.
பாமர் தொப்பி: Bomber hat
இரண்டு காதுகளையும் நன்றாக மறைக்கும் வண்ணம் ஹெல்மெட் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. உட்புறம் மென்மையான உள் அடுக்கைக் கொண்டது. இது ஜெர்கின் தெர்மல் போன்ற உடைகள் அணியும் போது மேட்ச் ஆக இருக்கும்
க்ளோசி தொப்பி: Cloche hat
இது பாப் செய்யப்பட்ட சிகை அலங்காரங்களை கொண்டவர்களுக்கு ஏற்றது. அதற்கேற்ற நெருக்கமான வடிவமைப்பை கொண்டது. இதுவும் மென்மையான துணி அல்லது கம்பளியால் செய்யப்படுகிறது இது எல்லாவிதமான உடைகளுக்கும் ஏற்றுது.