ஒரு ஆண்டில் 4.48 லட்சம் குற்றங்கள்! பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே? உச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை!

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறியபோதிலும் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆணாதிக்கம் நீடிக்கிறது என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Court order
Court order
Published on

பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட சட்டச் சீர்திருத்தங்கள், நலத்திட்டங்கள் மற்றும் நீதித்துறை தலையீடுகள் ஆகியவற்றுக்குப் பிறகும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து பரவலாகவே நீடித்து வருவதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், குடும்ப வன்முறை மற்றும் பாலினம் சார்ந்த குற்றங்கள் தொடர்ந்து நிலவி வருவது, சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒரு ஆணாதிக்க அமைப்பையே பிரதிபலிப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பட்ட எழுத்தறிவு விகிதத்தைக் கண்டுள்ள போதிலும்... என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது மனைவியை எரித்துகொன்றதாக ஒருவருக்கு கீழ்கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். திருமணமாகி ஒரு மாதத்திற்குள், மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றதையும், தனக்கு உணவு சமைத்துப் போடத் தவறியதையும் கண்டு, மேல்முறையீட்டாளர் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மனு மீதான விசாரணை முடிந்தநிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வரர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. மனுதாரரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இதையும் படியுங்கள்:
'பெண்களை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்': மாதவிடாய் விடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த நீதிமன்றம்..!
Court order

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வியறிவு வளர்ந்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேறி உள்ளனர். இருப்பினும், கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறச் சூழல்களில், ஆணாதிக்கமே அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகத் தொடர்ந்து நீடிக்கிறது. குடும்பத்தில் அதிகாரம் ஆண்களிடம் இருக்கிறது. பெண்களுக்கான அதிகாரம், கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது.

குடும்ப வன்முறை போன்ற பழக்கங்கள், ஒரு விதிவிலக்காக அல்லாமல், நோய்வாய்ப்பட்ட சமூதாயத்தின் அறிகுறிகளாகவே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கவலையளிக்கும் சித்திரங்களாக இருக்கின்றன.

அரசியலமைப்பு சட்டம் சமத்துவம், பாலின அடிப்படையில் பாரபட்சமற்ற தன்மை, வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு உறுதி அளித்துள்ளது. இருப்பினும், இது போன்ற வழக்குகள், இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, நமது அடிப்படைச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள உரிமைகள் பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளன என்பதை உணர்த்துகின்றன என்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.

பெண்கள் மற்றும் அவர்களின் சமூகப் பங்களிப்புகள் குறித்துச் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ள இழிவான கண்ணோட்டங்களிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் செயல்முறை, சுதந்திரம் பெற்ற உடனேயே தொடங்கிவிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதே நேரத்தில், அரசாங்கத்தின், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’, ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’, ‘உஜ்வாலா திட்டம்’ போன்ற முன்னெடுப்புகள் பெண்களின் நிதிப் பாதுகாப்பை அதிகரிப்பதையும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், நிலைமை சரியாக இல்லை என்பதை அனுபவப்பூர்வமான தரவுகள் காட்டுகின்றன. இது உண்மையிலேயே கவலையளிக்கிறது என்று நீதிபதி அமர்வு கூறியது.

இதையும் படியுங்கள்:
தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை... உச்சநீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பு!
Court order

கடந்த 2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 4.48 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் குறிப்பிடுவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. வரதட்சணை தொடர்பான வன்முறைகள் ஆண்டுதோறும் 6,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்து வருகிறது, இது நீண்ட காலமாக சட்டவிரோதமாக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்வதை வெளிப்படுத்துகிறது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com