வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி நாள்... ஜூலை 31 அல்லது ஆகஸ்ட் 31..?

வருமான வரித் தாக்கல் படிவம் (ITR) என்பது, நீங்கள் இந்திய வருமான வரித் துறைக்குச் சமர்ப்பிக்கும் ஒரு படிவமாகும்.
income tax filing
income tax filingfreepik
Updated on

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கான காலக்கெடு எப்போது முடிகிறது, ஜூலை 31ம்தேதியில் யார் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும், ஆகஸ்ட் 31ம்தேதி யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க..

வருமான வரித் தாக்கல் படிவம் (ITR) என்பது, நீங்கள் இந்திய வருமான வரித் துறைக்குச் சமர்ப்பிக்கும் ஒரு படிவமாகும். ஓர் ஆண்டில் நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினீர்கள், ஏற்கனவே எவ்வளவு வரி செலுத்தியுள்ளீர்கள் (TDS, முன்பண வரி போன்றவை மூலம்), மற்றும் உங்களுக்கு வரித் திரும்பப் பெறப்பட வேண்டுமா அல்லது நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டுமா போன்ற விவரங்களை இது அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது.

2025-26 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரிக் கணக்குகளை (ITR) தாக்கல் செய்யத் தயாராகும் வரி செலுத்துவோர் இந்த ஆண்டு சில மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

2026 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, பல்வேறு பிரிவுகளுக்கான தாக்கல் காலக்கெடு திருத்தப்பட்டுள்ளது. உங்கள் கணக்குகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்யத் தவறினால் கணிசமான அபராதங்களும் வட்டியும் விதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
மக்களுக்கு அடுத்த செக்..! இனி வங்கி டெபாசிட்டுக்கும் வருமான வரி நோட்டீஸ் வருமாம்..!
income tax filing

பட்ஜெட் 2026 புதுப்பிப்பு

திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் (ITR-1 & ITR-2) செய்வதற்கான கடைசித் தேதி, தற்போதுள்ள டிசம்பர் 31-ம்தேதியிலிருந்து ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டு 2025-26 (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) முதல், வருமான வரி அறிக்கை (ITR-3) மற்றும் வருமான வரி அறிக்கை (ITR-4) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமான பெறுவோர், இதர வருமானம் பெறுபவராகவோ இருந்தால் உங்களுக்கான காலக்கெடு 2026 ஜூலை 31 ஆகும். தணிக்கைக்கு உட்பட்டவர்கள் அக்டோபர் 31, 2026-க்குள் தங்கள் வரிகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.

கட்டாயத் தணிக்கைக்கு உட்படாத கணக்குகளைக் கொண்ட தனிநபர்கள் அல்லது சிறு வணிகங்களுக்கு (சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போன்றோர்), காலக்கெடு 2026 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிக்கலான கணக்கீடுகள் காரணமாக இந்தப் பிரிவினருக்குக் கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் காலக்கெடுவைத் தவறவிட்டால் 2026 டிசம்பர் 31-ம்தேதி வரை தாமதமான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம் என்றாலும், இதற்குச் செலுத்த வேண்டிய வரியின் மீது கடுமையான அபராதங்களும் வட்டியும் விதிக்கப்படும்.

சுருக்கமாக சொன்னால் இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால், பிரிவு 234A இன் கீழ் வட்டிக் கட்டணங்களும், பிரிவு 234F இன் கீழ் ரூ. 5,000 வரை தாமதக் கட்டணமும் விதிக்கப்படலாம். அதாவது உங்கள் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டினால், ரூ.5,000ம், உங்கள் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால், ரூ.1,000 தாமத கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் உரிய தேதியைத் தவறவிட்டால், மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31ம்தேதி வரை தாமதமான வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
இனி IT ஆபீஸிற்கு அலைய தேவையில்லை..! வருமான வரித்துறையின் ‘AI.. Kar Saathi’ அறிமுகம்!
income tax filing

அதேபோல் வருமான அறிக்கையில் உள்ள பிழைகளை வரும் டிசம்பர் 31 வரை திருத்திக் கொள்ளலாம் (திருத்தப்பட்ட அறிக்கை). முந்தைய ஆண்டுகளில் விடுபட்ட வருமானத்தை அறிவிப்பதற்கான ITR-U (புதுப்பிக்கப்பட்ட அறிக்கை) விருப்பம் 2031-ம் ஆண்டின் மார்ச் 31-ம்தேதி வரையில் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com