இந்த ஒரு கார்டு இருந்தால் போதும்....கூலித்தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் வரும்..!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு வழங்கும் இந்த அட்டையின் மூலம் மாத ஓய்வூதியம் மற்றும் பல நன்மைகளைப் பெறுவது எப்படி என்பதை அறியலாம்.
E-Shram Card|இ-ஷ்ரம் கார்டு
E-Shram Card|இ-ஷ்ரம் கார்டுAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

இந்தியாவின் அமைப்புசாரா துறை (Unorganised Sector) தொழிலாளர்களின் துல்லியமான தரவுகளைச் சேகரித்து, அவர்களுக்கு அரசின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை நேரடியாகக் கொண்டு சேர்ப்பதற்காக மத்திய அரசால் இ-ஷ்ரம் கார்டு (e-Shram Card) திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தொழிலாளர்களின் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அமைப்பில் தொழிலாளர்களின் பெயர், தொழில், முகவரி, கல்வித் தகுதி, திறமைகள், குடும்ப விவரம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தகவல் அமைப்பும் இதுவே.

இ-ஷ்ரம் (e-Shram) போர்ட்டலில் நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மிக வேகமாக இணைந்து வருகிறார்கள். அரசு அறிவித்துள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 30 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், சாலையோர வியாபாரிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் போன்ற பலதரப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை (e-Shram Card) வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் நேரடியாகச் சென்றடைகின்றன.

16 முதல் 59 வயதுக்குட்பட்ட, வருமான வரி செலுத்தாத மற்றும் PF (EPFO) அல்லது ESI கணக்கு இல்லாத எந்தவொரு அமைப்புசாரா தொழிலாளரும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

பதிவு செய்யும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஆதார் அடிப்படையிலான 12 இலக்க யுஏஎன் (UAN - Universal Account Number) எண் கொண்ட இ-ஷ்ரம் அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதியுதவிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகத் தொழிலாளர்களின் வங்கித் கணக்குகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்வது.

முக்கிய நன்மைகள் :

* இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்குப் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மூலம் ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கிறது.

* எதிர்பாராத நிகழ்வால் பயனாளி இறந்துவிட்டால், அனைத்துப் பலன்களும் மனைவிக்கு மாற்றப்படும்.

* பிரதம மந்திரி ஷரம் யோகி மன்-தன் (PM-SYM) திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேல் தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்.

* 60 வயது வரையிலான காலகட்டத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு விபத்திற்கும் உங்களுக்கு முழுமையான காப்பீடு கிடைக்கும்.

* எதிர்காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு நிதி உதவிகள் மற்றும் நலத்திட்டஉதவிகள் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Unorganized worker
Unorganized worker

* ஆயுஷ்மான் பாரத், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிஎம்-ஸ்வானநிதி போன்ற பல்வேறு மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒரே தளத்தில் இணைத்து எளிதாகப் பெறலாம்.

தகுதிகள் :

* இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

* 16 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

* அமைப்புசாரா (Unorganised Worker) துறையில் பணிபுரியும் தொழிலாளராக (உதாரணமாக: கட்டுமானம், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், ஓட்டுநர்கள், தையல்காரர்கள், பிளம்பர்கள் மற்றும் கார்பென்டர்கள்) இருக்க வேண்டும்.

* வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது மற்றும் அரசுப் பணியில் அல்லது இபிஎஃப்ஓ (EPFO) அல்லது இஎஸ்ஐசி (ESIC) உறுப்பினராக இருக்கக் கூடாது.

தேவைப்படும் ஆவணங்கள் :

ஆதார் அட்டை (Aadhaar Card)

ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் (Aadhaar-linked active mobile number)

வங்கி கணக்கு விவரங்கள் (Bank account passbook or account number / IFSC code)

இதையும் படியுங்கள்:
ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்..! சுமார் ₹25,000 கோடி மதிப்பிலான நிதி உதவி..!
E-Shram Card|இ-ஷ்ரம் கார்டு

விருப்ப ஆவணம் :

கல்விச் சான்றிதழ்

வருமானச் சான்றிதழ்

வணிகச் சான்றிதழ்

திறன் சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை :

இ-ஷ்ரம் கார்டுக்கு (e-SHRAM Card) அதிகாரப்பூர்வ இணையதளமான இ-ஷ்ரம் போர்டல் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) வழியாகவோ இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

உதவிக்கு மத்திய அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 14434 அல்லது 1800 889 6811.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை :

இ-ஷ்ரம் அதிகாரப்பூர்வ (https://register.eshram.gov.in/#/user/self) தளத்திற்கு செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள "Register on e-SHRAM" அல்லது "e-SHRAM-ல் பதிவு செய்க" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிட்டு வரும் ஓடிபி-ஐ (OTP)

உள்ளிட்டு உங்கள் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தவும்.

உங்கள் கல்வித் தகுதி, தொழில் விவரங்கள் (Occupation) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சரியாக நிரப்பவும்.

இதையும் படியுங்கள்:
PM Kisan நிதி உதவி: விவசாயிகளுக்கு ரூ.6,000 கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
E-Shram Card|இ-ஷ்ரம் கார்டு

அனைத்து விவரங்களையும் சரிபார்த்து சமர்ப்பித்தவுடன் (Submit), உங்கள் இ-ஷ்ரம் கார்டு உருவாகும்.

அதை உடனே பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com