இந்தியன் ரெயில்வேயில் 1,599 பணியிடங்கள்.. தேர்வு கிடையாது.. விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் ரெயில்வேயில் ரெயில்வே பணி நியமனப் பிரிவு (RRC), 1,599 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Railway Jobs - RRB
Railway Jobs
Updated on

இந்திய ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மண்டல ரயில்வேயின் (East Coast Railway-ECOR) ரெயில்வே பணி நியமனப் பிரிவு (RRC), அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபிட்டர், மெக்கானிக், பெயிண்டர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1,599 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நியமனத்திற்கு எழுத்துத் தேர்வு கிடையாது; தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rrcbbs.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு (ரயில்வே வேலைவாய்ப்பு) எப்படி விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: கிழக்கு மண்டல ரெயில்வே (ECOR)

ஆள்சேர்ப்பு அமைப்பு: ரெயில்வே ஆள்சேர்ப்பு பிரிவு (RRC), புவனேஸ்வர்

பதவியின் பெயர்: டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentice)

மொத்தக் காலிப்பணியிடங்கள்: 1,599 இடங்கள்

பணியிடங்கள் விவரங்கள்:

ஃபிட்டர் - 80

ஷீட் மெட்டல் - 20

வெல்டர் - 38

மெஷினிஸ்ட் - 12

மெக்கானிக் - 10

தச்சர் - 30

பெயிண்டர் - 10 என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1,599 பயிற்சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய தொழிலில் NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். (15/09/2026 அன்றுள்ளபடி) அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. அதன்படி, SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரையும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும், PwBD (மாற்றுத்திறனாளிகள்) 10 ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் பணியாற்றிய கால அளவுடன் கூடுதலாக 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் ஏதுமின்றி தேர்வு செயல்முறை நடத்தப்படுகிறது.

Railway Job|ரயில்வே வேலைவாய்ப்பு
Railway Job|ரயில்வே வேலைவாய்ப்புAI Image

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆவணச் சரிபார்ப்பு: தகுதிப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் புவனேஷ்வரில் உள்ள கிழக்குக் கடற்கரை ரயில்வே (East Coast Railway) தலைமையகத்தில் நடைபெறும் ஆவணச் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அனைத்து மதிப்பெண் பட்டியல்கள், சான்றிதழ்கள் மற்றும் அடையாளச் சான்றுகளின் அசல் பிரதிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவரின் மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெறுவதைப் பொறுத்தே இறுதித் தேர்வு அமையும்.

இதையும் படியுங்கள்:
டிகிரி போதும்... ஆரம்பமே 35,000 சம்பளம்.. இந்தியன் ரெயில்வேயில் 4098 காலிப்பணியிடங்கள்..!!
Railway Jobs - RRB

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26 ஆகஸ்ட் 2026 (17:00 மணி)

விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 15 செப்டம்பர் 2026 (மாலை 5:00 மணி)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டும்

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் வழியாக மட்டும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: www.rrcbbs.org.in

சம்பளம்: ரெயில்வே வாரியத்தால் வெளியிடப்பட்ட தற்போதைய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி, பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் மாதாந்திர சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு குறித்த விவரங்களை https://www.rrcbbs.org.in/Act-apprenticeship.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம் : இது புது வகை மோசடி - இந்தியன் ரெயில்வே..!
Railway Jobs - RRB

10-ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்களுக்கு East Coast Railway Apprentice Recruitment 2026 ஒரு முக்கிய வாய்ப்பாகும். மொத்தம் 1,599 பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, வரும் செப்டம்பர் 15-ம்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com