குட் நியூஸ்.! இனி சென்னை டூ டெல்டா விரைவாக பயணிக்கலாம்..! வந்தது பெரிய மாற்றம்..!

ECR Nagapattinam
ECR Nagapattinamsource : oneindia
Published on

டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை நான்கு வழிச்சாலைப் பணி, 2008 ஆம் ஆண்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் சவால்கள், நீண்டகால வழக்குகள் காரணமாக இத்திட்டம் தாமதங்களைச் எதிர்கொண்டு வந்தது.

இந்நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலையை (ECR) நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று முடிந்து, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி - பூண்டியங்குப்பம் இடையிலான 38 கி.மீ. தூரப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் முதற்கட்டமாக ₹1,588 கோடி செலவில் இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்ததால், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்குப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பயண நேரம் இரண்டு மணி நேரம் வரை குறையும் என கூறப்படுகிறது.

சென்னைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே உள்ள 320 கி.மீ தூரத்தை காரில் ஏழு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திலும், பேருந்தில் ஒன்பது மணி நேரத்திலிருந்து ஏழு மணி நேரத்திலும் இனி சென்றடைய முடியும்.

சென்னை திருவான்மியூரிலிருந்து நாகப்பட்டினம் வரையிலான விரிவுபடுத்தப்பட்டுள்ள. 300 கி.மீ. ஈ.சி.ஆர். சாலையில் தற்போது 220 கி.மீ. தூரம் நான்கு வழிச் சாலை இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கான சாலை இணைப்பை வெகுவாக மேம்படுத்தியுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அக்டோபர் 13 அன்று இந்தப் புதிய சாலைப் பிரிவுகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும், 300 கி.மீ. கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கத் திட்டத்தின் இறுதிப் பகுதியான மரக்காணம் - புதுச்சேரி இடையேயான 46 கி.மீ. தூர நான்கு வழிச்சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி உள்ளார் என அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு வழிச்சாலை நிறைவு செய்யப்பட்ட 220 கி.மீ. நான்கு வழிச்சாலைகளில் திருவான்மியூர் - மாமல்லபுரம் (41 கி.மீ.), பூண்டியங்குப்பம் - சத்தநாதபுரம் (57 கி.மீ.) ஆகிய பகுதிகள் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. நாகப்பட்டினம் (56 கி.மீ.) மற்றும் மாமல்லபுரம் - மரக்காணம் (62 கி.மீ.) ஆகிய 119 கி.மீ. தூரப் பிரிவுகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 85 கி.மீ. தூரப் பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய பகுதிகள் அடுத்த ஆண்டு மத்தியில் முடிக்கப்படும் என்றும், மரக்காணம் - புதுச்சேரி இடையேயான இறுதிப் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கிழக்கு கடற்கரைச்சாலை விரிவாக்கம், நீண்டகாலமாக சரியான சாலை இணைப்பு இல்லாமல் சிரமப்பட்ட மக்களுக்கு இத்திட்டம் பெரும் பயனை அளிக்கும். புதுச்சேரி - நாகப்பட்டினம் பிரிவு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையையும் அகலப்படுத்தியுள்ளது. இது தாம்பரம் - திருச்சி வழித்தடங்களுக்கான இணைப்புகளை மேம்படுத்தியுள்ளது. இந்த பணிகள் டெல்டா பகுதிக்கு சாலை மற்றும் பேருந்துப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
பணி ஓய்வுக்குப் பின் 20 வருடங்கள்... என்ன செய்வது? வாழ்க்கையை வீணடிக்கும் ‘இந்த’ தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
ECR Nagapattinam

சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை (56 கி.மீ.) திட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள சட்டநாதபுரத்தில் தொடங்கி நாகூர் மற்றும் நாகப்பட்டினம் புறவழிச்சாலைக்கு (மேற்குப் பகுதி) அருகில் முடிவடைகிறது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வழியாகச் செல்லும் இத்திட்டம் ₹2,899 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 56 கி.மீ. தூரத்தில் 50 கி.மீ. பணிகள் இதுவரை முடிந்துள்ளன. தரங்கம்பாடி - மயிலாடுதுறை இறுதி கட்டத்தில், தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயில்வே வழித்தடம் மற்றும் திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள காரைக்கால் - பேரளம் பிரிவில் சாலை மேம்பாலங்கள் கட்டும் பணிகலும் இதில் அடங்கும். ஒரு பெரிய மேம்பாலம் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றும், ரயில்வே தங்கள் பகுதியைப் பூர்த்தி செய்தவுடன் மீதமுள்ள பணிகள் முடிவடையும் என்றும் கூறப்படுகின்றன.

இதேபோல், மாமல்லபுரம் - மரக்காணம் இடையேயான 62 கி.மீ. தூரத்தில், 35 கி.மீ. பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நீர்நிலைகள், நீதிமன்ற வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சவால்கள் போன்றவற்றால் தாமதமாகி வருகின்றன.

எனவே இனி வரும் காலங்களில் கிழக்கு கடற்கரைச்சாலையின் மூலமாக டெல்டா மாவட்டப்பகுதிகளுக்கு விரைவாக பயணிகள் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்னதும் டாக்டர் சொல்றதும் ஒண்ணா? மழைக்கால தயிர் பஞ்சாயத்துக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்!
ECR Nagapattinam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com