50 ஆண்டுகளில் முதல்முறை! சூப்பர் எல்நினோ ஏற்படுத்தப்போகும் பிரம்மாண்ட மாற்றம்

வெப்பநிலை 3 டிகிரி உயர்வு; 2026-ல் தமிழகம் சந்திக்கப்போகும் அதீத வானிலை மாற்றங்கள்!
சூப்பர் எல்நினோ | Super El Nino
சூப்பர் எல்நினோ | Super El NinoAI Image
Updated on

50 ஆண்டுகளுக்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் சூப்பர் எல்நினோ (Super El Nino), 2026-ல் உலகளாவிய காலநிலை மாற்றத்தையும், அதீத வெப்பத்தையும் ஏற்படுத்தி, தென்மேற்கு பருவமழையை வெகுவாகக் குறைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கிழக்கு மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவானால், அது ‘எல்நினோ’ என்றும், இயல்பை விட குறைவாகஇருந்தால் அது லாநினோ என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் ‘எல்நினோ’ அமைப்பு வெப்பத்தையும், ‘லாநினோ’ அமைப்பு மழைக்கான சூழலையும் கொடுக்கக்கூடியது. அந்த வகையில் வருகிற அக்டோபர் மாதம் ‘எல்நினோ’ உருவாக உள்ளது. இது அடுத்த ஆண்டு (2027) மே மாதம் வரை நீடிக்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் ஐரோப்பிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டு பூமி ஒரு 'சூப்பர் எல் நினோ' நிகழ்வைச் சந்திக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

சூப்பர் எல்நினோ | Super El Nino
சூப்பர் எல்நினோ | Super El NinoAI Image

ஆனால் தற்போது சூப்பர் எல்நினோ உருவாக உள்ளதால் கடல் நீர் வெப்பநிலை 3 டிகிரி டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை அதிகரிக்கும்.

கடல் நீரின் இந்த அதீத வெப்பம் காரணமாக, பசிபிக் பகுதியில் கனமழை பெய்யும் அதே வேளையில், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் காற்று கீழ்நோக்கி அழுத்தப்பட்டு, மேகங்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது மழைக் குறைபாட்டிற்கும், கடுமையான வெப்பத்திற்கும் வழிவகுக்கிறது. மொத்தத்தில், 2026-ம் ஆண்டு உலக வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக அமையக்கூடும்.

‘எல்நினோ’ அமைப்பால் சென்னை, புதுச்சேரி போன்ற கடலோர நகரங்களில் வெப்பநிலை கணிசமாக உயரும் மற்றும் எதிர்பாராத தீவிர வானிலை மாற்றங்களை சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். கடும் வெப்பத்தினால் நீர்நிலைகள் வேகமாகக் காய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் 'எல் நினோ' எச்சரிக்கை: இந்தியாவில் கடுமையான வறட்சி, உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
சூப்பர் எல்நினோ | Super El Nino

இந்தாண்டு அக்டோபர் மாதம் ‘எல்நினோ’ உருவாக உள்ளதால் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட குறைவாகவே பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வால் அடுத்த ஆண்டு முதல் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மழை பொழிவு வெகுவாக குறையும்.

இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களை விட ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அக்டோபர் மாதம் தொடங்கும், தமிழ்நாட்டிற்கு மழை கொடுக்கக்கூடிய வடகிழக்கு பருவமழைக்கு இந்த எல்நினோ அமைப்பு சாதகமாக இருக்கும் என்றாலும், 2027ல் நீர்த்தேவையைக்காக கிடைக்கும்போதே சேகரிப்பது அவசியமான ஒன்று என்பதையும் வானிலை ஆய்வாளர் தெளிவுபடுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
உலகை அச்சுறுத்தும் El Nino பற்றி தெரியுமா?
சூப்பர் எல்நினோ | Super El Nino

உதாரணமாக இதற்கு முன்பு சூப்பர் எல்நினோ அமைப்பு 2015-ல் உருவான போது சென்னையில் பெருவெள்ளமும், பிற பகுதிகளில் மழையும் கொடுத்தது. ஆனால் அதுவே 2016-ல் வறட்சி ஏற்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com