தேதி 20 ஆச்சு... பேங்க்ல பணம் வரல! - மனதை உலுக்கும் முதியோர் தம்பதியின் பேட்டி!

வயதான தம்பதியினர் முதியோர் உதவித்தொகை கிடைக்காததால், பஸ் பயணத்திற்காக ரூ.200 கடன் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளனர்.
வயதான தம்பதி|சிவகங்கை செய்தி
வயதான தம்பதி|சிவகங்கை செய்திimage credit-puthiyathalaimurai
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியினர், செப்டம்பர் 20 ஆம் தேதி ஆகியும் முதியோர் உதவித்தொகை (OAP) கிடைக்காததால், பஸ் பயணத்திற்காக ரூ.200 கடன் வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, காண்போரின் மனதை கலங்கச் வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதி தனலட்சுமி-அன்னக்களஞ்சியம். இவர்கள் தங்களுக்கு வரவேண்டிய முதியோர் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கலெக்டரைச் சந்தித்து உதவித்தொகை வழங்கக் கோரி மனு அளிக்க யாரிடமோ ரூ.200 கடன் வாங்கிப் பயணம் செய்து வந்ததாக வயதான தம்பதி கூறியது காண்போரை கலங்க செய்தது.

வயதான முதியவர் நடக்க முடியாமல் ஒரு கையில் கைத்தடி பிடித்து தள்ளாடியபடி நடந்து வர, அவரது மனைவி அவரைத் கைத்தாங்கலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரும் வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

10-ம்தேதி வர வேண்டிய முதியோர் உதவித்தொகை இதுவரை வராத காரணத்தால் கலெக்டர் அய்யாவை பார்க்க வந்ததாக அந்த வயதான தம்பதி கூறினர். மேலும் அந்த முதியவர் மருத்துவமனையில் இருந்ததாகவும், கலெக்டர் அய்யாவை பார்ப்பதற்காக அவரை (தனது கணவரை) அழைத்து வந்ததாகவும் அவரது மனைவி கூறினார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தபோதிலும் தங்களை கவனித்துகொள்ள யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த வயதான தம்பதியினர் தங்களுக்குக் கிடைக்கும் மாத உதவித்தொகையான ரூ1,200-ஐ மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாதமும் 10-ம்தேதி உதவித்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த மாதம் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறினார். இதனையடுத்து உதவித்தொகை தொடர்பாக மனு அளிப்பதற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வர குன்றக்குடியில் இருந்து பேருந்தில் பயணம் செய்ய 200 ரூபாய் கடன் வாங்கி வந்ததாக இந்த தம்பதியினர் தெரிவித்தனர்.

நடக்க முடியாத தனது கணவரை கைத்தாங்கலாக பிடித்து அவரது மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழைத்து வந்த காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. அதிகாரிகளை சந்தித்து தங்களது நிலைமையை எடுத்து கூறியதாக அந்த தம்பதியினர் கூறினர்.

முதியோர் உதவித்தொகை தாமதம் ஆவதால் தங்களை போன்ற ஆதரவற்ற முதியவர்கள் அன்றாட செலவுகளுக்கு சிரமப்படுவதாக தெரிவித்த அந்த வயதான தம்பதி முதியோர் உதவித்தொகையை உரிய தேதியில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, சிவகங்கை மற்றும் சுற்று வட்டாரங்களில் இந்த மாதத்துக்கான முதியோர் உதவித்தொகை, பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் ஏராளமான முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு.! முதல்வர் அறிவிப்பு.!
வயதான தம்பதி|சிவகங்கை செய்தி

60 வயதை கடந்தோருக்கு அரசாங்கம் கொடுக்கும் 1200 ரூபாய் உதவித் தொகைக்காக 200 ரூபாய் கடன் வாங்கி ஆட்சியர் அலுவலகம் வந்த வயதான தம்பதியினரின் நிலை, சமூக நலத்திட்ட உதவிகள் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இதற்கிடையே இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் (சிவகங்கை செய்தி) இந்த விவகாரம் குறித்து நேரடி விளக்கம் அளித்துள்ளார்.

முதியோர்களுக்கான உதவித்தொகை அவர்களின் கனரா வங்கி கணக்கிற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும், ஆனால் தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது முதியவர்களால் நேரடியாக வங்கிக்குச் செல்ல முடியாத சூழ்நிலையாலோ அதனை அவர்களால் எடுக்க முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்களுக்கு உதவி செய்ய பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். அதன்படி, ஒரு கோவில் சார்பில் ரூ.50,000 ரொக்கம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
95 வயதில் அசத்தும் சமூக ஆர்வலர்!
வயதான தம்பதி|சிவகங்கை செய்தி

இதை தவிர சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த சிலரும் இந்த முதிய தம்பதியருக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், அமைச்சர் பிரபு சார்பிலும் உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com