தன்னுடைய பிரிவு உபச்சாரத்தின்போது பேசிய ஜோ பைடன் எலான் மஸ்க்கால் அமெரிக்காவிற்கு பெரிய ஆபத்து என்று பேசியிருக்கிறார்.
சென்ற ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் போட்டியிடப்போவதாக சொன்ன ஜோ பைடன், திடீரென்று போட்டியிலிருந்து விலகினார். ஜோ பைடனுக்கு ஏற்கனவே சொந்த கட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தன. ஆகையால், அவரை இம்முறை போட்டியிட விடக்கூடாது என்று கட்சிக்காரர்களே எதிர்த்தனர்.
இதனால் அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே பெரிய போட்டி நடைபெற்றது. இதற்கிடையே டொனால்ட் ட்ரம்பை சில மர்ம நபர்கள் தொடர்ந்து தாக்கி வந்தனர். ஆனாலும், அதையும் தாண்டி அவர் வெற்றிபெற்றார். அதேபோல் கமலா ஹாரிஸும் பல முறை சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னத்தான் பல நடிகை நடிகர்கள் போன்ற பிரபலங்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தாலும், டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் இறங்கினார். டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றதை அடுத்து எலான் மஸ்க் ட்ரம்ப் இருவரும் சேர்ந்து வெற்றி கொண்டாட்டத்தில்கூட ஈடுபட்டனர்.
இப்படியான நிலையில் அமெரிக்க நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், எலான் மஸ்க் போன்றவர்களால் அமெரிக்கா ஆபத்தில் இருப்பதாக மறைமுகமாகக் கூறியுள்ளார். ஜோ பைடன் தனது பிரிவு உபச்சாரத்தின்போது அமெரிக்காவில் மிகவும் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களைக் கொண்ட ஒரு சுயநலக் குழு உருவாகி வருவதாக பைடன் கூறினார்.
இந்த குழு ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார். தொழில்நுட்பத் துறைத் தலைவர்களின் சாத்தியமான எழுச்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இதேபோல், பதவியில் இருக்கும்போது தவறு செய்பவர்களைத் தண்டிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பேசினார்.
டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவாக செயல்பட்டதால் எலான் மஸ்க்கை தாக்கி பேசியிருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.